திங்கட்கிழமை, ஜூன் 17, 2024
திங்கட்கிழமை, ஜூன் 17, 2024

HomeFact Checkஅண்ணாமலையை புகழும் சுவர் விளம்பரத்தில் எழுத்துப்பிழை இருப்பதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

அண்ணாமலையை புகழும் சுவர் விளம்பரத்தில் எழுத்துப்பிழை இருப்பதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

அண்ணாமலையை புகழும் வகையில் எழுதப்பட்ட சுவர் விளம்பரத்தில் நேதாஜி என்பதற்கு பதிலாக நோதாஜி என்று எழுதப்பட்டதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

Screenshot from @DMKITwing

திமுக IT wing உட்பட பலரும் இப்புகைப்படத்தை பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Screenshot from @TRBRajaa
Screenshot From @thechanakkiyan

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: உ.பி.யில் தலித் பெண் ஆற்றில் குளித்ததால் பாஜகவினர் அவரை தாக்கினரா?

Fact Check / Verification

அண்ணாமலையை புகழும் வகையில் எழுதப்பட்ட சுவர் விளம்பரத்தில் நேதாஜி என்பதற்கு பதிலாக நோதாஜி என்று எழுதப்பட்டதாகப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து இதுகுறித்து ஆய்வு செய்தோம்.

குறிப்பிட்ட புகைப்படத்தில், நேதாஜி என்கிற வார்த்தையில் துணைக்கால் இடம்பெற்றுள்ளதாக வைரலாகும் நிலையில் அந்த எழுத்து மட்டும் புகைப்படத்திற்கு ஒட்டாத நிலையில் தொக்கி நிற்பது நமக்குத் தெரிய வந்தது. இதைப்பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

தொடர்ந்து, இந்த வைரல் புகைப்படத்தை பதிவிட்டவர்களின் ட்விட்டர் பதிவுகளின் கீழேயே வைரலாகும் புகைப்படத்தின் உண்மையான புகைப்படத்தை பாஜகவினர் பலரும் பகிர்வதையும் காண முடிந்தது.

இப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது, பிப்ரவரி 3 ஆம் தேதியன்று “அண்ணாமலையின் அரசியல் அறிவோம்” என்கிற யூடியூப் பக்கத்தில் பிரதமர் மோடி, அண்ணாமலை ஆகியோர் இடம்பெற்றுள்ள இச்சுவர் விளம்பரம் முழுமையாக இடம் பெற்றுள்ளது. அதில், “நேதாஜி” என்கிற வார்த்தை சரியாகவே இடம்பெற்றுள்ளது என்பதை அறிய முடிந்தது.

“Army of Dheeran Annaamalai” என்கிற ட்விட்டர் பக்கத்திலும் “திண்டுக்கல், மதுரை பைபாஸ்! பட்டி தொட்டி எங்கும் தாமரை!” என்று இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.

பாஜகவின் மாநில செயலாளர் வெங்கடேசன் என்பவரும் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த பதிவுகள், பாஜக கிழக்கு ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

மேலும், திண்டுக்கல் கிழக்கு பாஜக நிர்வாகி நாட்ராயன் என்பவரும் இந்த விளம்பரத்தின் வேறு சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இவை எல்லாவற்றிலும் நேதாஜி என்னும் வார்த்தை சரியாகவே அமைந்துள்ளது. ஆனால், உண்மையில் இந்த சுவர் விளம்பரத்தில் பட்டிதொட்டியெங்கும் என்று எழுதப்பட்டுள்ள இடத்திலேயே எழுத்துப்பிழை இடம்பெற்றுள்ளது.

வைரலாகும் புகைப்படம் குறித்து அண்ணாமலை தரப்பில் அவரது செயலாளர் பிரபாகரைத் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர், “வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு தவறாக பரப்பப்படுகிறது” என்று விளக்கமளித்தார்.

Also Read: திமுக அரசு அதிக வரி விதிப்பதாக பாட்டி ஒருவர் பேசியதாக பழைய வீடியோவை வெளியிட்ட அதிமுக கோவை சத்யன்! 

Conclusion

அண்ணாமலையை புகழும் வகையில் எழுதப்பட்ட சுவர் விளம்பரத்தில் நேதாஜி என்பதற்கு பதிலாக நோதாஜி என்பதாக எழுதப்பட்டதாகப் பரவுகின்ற புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Sources

Twitter Post From, Natrayan Msc, Dated February 03, 2023
Twitter Post From, VenkatesanBjp, Dated February 03, 2023
YouTube Video From, அண்ணாமலையின் அரசியல் அறிவோம், Dated February 03, 2023
Twitter Post From, Army of Dheeran Annamalai, Dated February 03, 2023
Phone Conversation with, Prabhakar, Annaamalai PA, Dated February 05, 2023



(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular