Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்த தலைமுறை ஹீரோக்களில் முதலிடம்
வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்த தலைமுறை ஹீரோக்களில் முதலிடம் பிடித்திருப்பதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
”Thanthi TV Digital Survey on the Most Promising Next-Generation Tamil Cinema Heroes. 1. Pradeep ranganathan – 55.5% 2. Sivakarthikeyan – 22.1% 3. Dhruv Vikram – 16.5% 4. Ashok Selvan – 5.8%” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது.



சமூக ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ராகுல் காந்தி இளம்பெண் ஒருவருடன் இன்பச்சுற்றுலா சென்றதாகப் பரவும் வீடியோ தகவல் உண்மையா?
நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்த தலைமுறை ஹீரோக்களில் முதலிடம் பிடித்திருப்பதாக தந்தி டிவி சர்வே முடிவு என்று பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரல் சர்வேயை வெளியிட்டது தந்தி டிவி என்பதாக இந்த நியூஸ்கார்ட் பரவும் நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தை ஆராய்ந்தோம்.
அதன்படி, கடந்த நவம்பர் 16ஆம் தேதியன்று தந்தி டிவி வெளியிட்டுள்ள தந்தி டிவி நடத்திய டிஜிட்டல் சர்வே முடிவுகளில் 55.5% பெற்று நடிகர் சிவகார்த்திகேயனே முதலிடம் பிடித்துள்ளார். அடுத்த இடத்தில் 22.1%த்துடன் பிரதீப் ரங்கநாதன் இடம்பெற்றுள்ளார்.
இதேபோன்று, பல்வேறு தலைப்புகளில் இந்த டிஜிட்டல் சர்வேயை நடத்தியுள்ளது தந்தி டிவி.
குறிப்பிட்ட நியூஸ்கார்டே எடிட் செய்யப்பட்டு பரவுகிறது என்பது நமக்கு இதன்மூலம் உறுதியாகிறது.


Also Read: அமித் ஷாவின் காலணிகளை ஊடகவியலாளர் நவிகா குமார் துடைத்ததாக பரவும் வீடியோ உண்மையானதா?
நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்த தலைமுறை ஹீரோக்களில் முதலிடம் பிடித்திருப்பதாக தந்தி டிவி சர்வே முடிவு என்று பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X Post By, Thanthi TV, dated November 16, 2025
Self Analysis
Ramkumar Kaliamurthy
April 1, 2025
Ramkumar Kaliamurthy
April 15, 2024
Ramkumar Kaliamurthy
July 3, 2021