Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
அமைச்சர் ராஜ்நாத் சிங் காலில் விழுந்த குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு
வைரலாகும் வீடியோ காட்சி AI மூலமாக உருவாக்கப்பட்டதாகும்.
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ராஜ்நாத் சிங் காலில் விழுந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”இந்திய ஜனாதிபதியின் நிலையை பாருங்கள்” என்று இந்த வீடியோ பரவுகிறது.


சமூக ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பீகாரில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக புரட்சி நடந்ததாக பரவும் வீடியோ உண்மையானதா?
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ராஜ்நாத் சிங் காலில் விழுந்ததாக பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது Pro Kerala ஊடகத்தில் “President Murmu Receives First Copies of ‘Wings to Our Hopes’ Vol. 2” என்கிற தலைப்பிலான செய்தியில் பரவி வரும் வீடியோவில் உள்ள குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு மற்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

மேலும், ராஷ்ட்ரபதி பவன் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்திலும் கடந்த ஜூன் 23, 2025 அன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் Wings to Our Hopes (Volume-II) என்கிற புத்தகத்தின் முதல் பிரதியை வழங்கினார். அப்போது, அமைச்சர்கள் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் எல்.முருகன் ஆகியோரும் உடனிருந்தனர் என்பதாக புகைப்படத்தொகுப்பு வெளியாகியுள்ளது. அதிலும், இப்புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

”Operation Sindoor met all objectives, instilled fear in terrorists, says Rajnath Singh” என்று வெளியாகியிருந்த The Hindu ஊடகத்தின் செய்தியிலும் இப்புகைப்படத்தைக் காண முடிந்தது.
எனவே, பரவி வரும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து Was It AI என்னும் செயற்கை நுண்ணறிவு காட்சிகளைக் கண்டறியும் இணையதளம் மூலமாக ஆராய்ந்தபோது வைரல் காட்சி AI மூலமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது நமக்கு உறுதியாகியது.

Also Read: பீகார் தேர்தல் முடிவுக்குப்பின் பாஜகவை எதிர்த்து மக்கள் திரண்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ராஜ்நாத் சிங் காலில் விழுந்ததாக பரவும் வீடியோ AI மூலமாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report by, Pro Kerala, Dated June 23, 2025
Report by The Hindu, dated June 25, 2025
Rashtrapatibhavan
Wasitai
Vasudha Beri
November 21, 2025
Ramkumar Kaliamurthy
November 3, 2025
Vijayalakshmi Balasubramaniyan
October 9, 2025