Fact Check
முருகன் மாநாட்டில் கதறி அழுத அர்ச்சகர்.. வைரலாகும் வீடியோத்தகவல் உண்மையானதா?
Claim
மதுரை முருகன் மாநாட்டில் கதறி அழுத அர்ச்சகர்.

சமூக ஊடகங்களில் வந்த இப்பதிவை இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
Also Read: இஸ்ரேல் அதிபர் மகனை இஸ்ரேல் மக்கள் அடித்ததாக பரவும் வீடியோத்தகவல் உண்மையா?
Fact
மதுரை முருகன் மாநாட்டில் கதறி அழுத அர்ச்சகர் என்று குறிப்பிட்டு பரப்பப்படும் வீடியோவில் நியூஸ் தமிழ் ஊடகத்தின் லோகோ இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.
இதை அடிப்படையாக வைத்து தேடியதில் நியூஸ் தமிழ் ஊடகத்தில் எக்ஸ் பக்கத்தில் “முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க.. இந்த நாடே நாசமா போகணுமா? ஆதங்கத்தை கொட்டி தீர்த்த அர்ச்சகர்.!” என்று தலைப்பிட்டு இந்த வீடியோவை ஜூன் 21, 2025 அன்று பகிர்ந்திருந்தை காண முடிந்தது.

ஆனால் இப்பதிவில் இவ்வீடியோ எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த எத்தகவலும் இடம்பெற்றிருக்கவில்லை. ஆகவே இவ்வீடியோ எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவலை அறிய அவ்வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.
அதில் ஒன் இந்தியா தமிழ் ஊடகத்தில் ஏப்ரல் 20, 2022 அன்று வைரலாகும் வீடியோ குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தால் நடுத்தெருவில் நிற்பதாகவும், அதை கொண்டு வந்தவர்கள் நாசமாய் போவார்கள் என்றும் திருச்சி குமாரவயலூர் சுப்பிரமணியசுவாமி கோயில் அர்ச்சகர் சாபமிட்டதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Also Read: மதுரை முருகன் மாநாட்டை முன்னிட்டு 100 கல்லூரி மாணவிகள் இணைந்து கந்தசஷ்டி கவசம் பாடினார்களா?
இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் வீடியோவுக்கும் அண்மையில் மதுரையில் நடந்த முருகன் மாநாட்டிற்கும் தொடர்பில்லை என உறுதியாகின்றது.
Sources
X post by News Tamil, Dated June 21, 2025
Report by One India Tamil, Dated April 20, 2022