புதிதாக தமிழகத்தில் நியமனம் செய்யப்பட்ட அர்ச்சகர்களில் ஒருவர் பீர் குடிப்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. இதனை வாசகர் ஒருவர் வாட்ஸ் அப் மூலமாக நமக்கு அனுப்பி அதுகுறித்த விளக்கத்தைக் கேட்டிருந்தார்.

திமுக கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டத்தின் அடிப்படையில் புதிதாக 58 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.
Also Read: புதிதாக பணியமர்த்தப்பட்ட அர்ச்சகர் சாமி சிலையின் மேல் நின்றாரா?
இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் மிகப்பரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த முன்னெடுப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் தங்கள் கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், புதிதாக பணியில் அமர்த்தப்பட்டுள்ள கோவில் அர்ச்சகர் ஒருவர் பொதுவெளியில் பீர் குடித்தார் என்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.


சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
புதிதாக நியமிக்கப்பட்ட அர்ச்சகர் ஒருவர் பீர் குடிப்பதாகப் பரவும் புகைப்படச் செய்தி அறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட அந்த புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது பலரும் இதனை ஷேர் செய்திருந்தது தெரியவந்தது. எனினும் அதுகுறித்த செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை.
தொடர்ந்து, கீவேர்டுகள் மூலமாகத் தேடியபோது இக்குறிப்பிட்ட புகைப்படம் வீடியோ ஒன்றில் இருந்து கட் செய்யப்பட்டு பரப்பப்படுவது நமக்குத் தெரிய வந்தது.
கடந்த 2017 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் “Priest drinking beer” என்கிற தலைப்பில் வீடியோ ஒன்று யூடியூபில் அப்லோட் செய்யப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட அந்த வீடியோவில் இருந்தே ஒரு காட்சி கட் செய்யப்பட்டு தற்போதைய புகைப்படமாக வைரல் செய்யப்பட்டு வருகிறது.
Conclusion:
புதிதாக நியமிக்கப்பட்ட அர்ச்சகர் ஒருவர் பீர் குடிப்பதாகப் பரவும் புகைப்படச் செய்தி என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources:
YouTube: https://www.youtube.com/watch?v=apxtMIV7pX4
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)