வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024

HomeFact Checkரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் ஒரு டிக்கெட் விலை 2925 ரூபாய் என்று பரவும் புகைப்படத்தின்...

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் ஒரு டிக்கெட் விலை 2925 ரூபாய் என்று பரவும் புகைப்படத்தின் பின்னணி என்ன?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகவிருக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ஒரு டிக்கெட் விலை ரூ.2925 என்று டிக்கெட் புகைப்படத்துடன் கூடிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Source: Facebook

தமிழ்நாடு மக்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்புடன் அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிவா இயக்கத்தில் தீபாவளிக்கு உலகளவில் வெளியாகிறது “அண்ணாத்த” திரைப்படம். தீபாவளிக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் திரைப்பட டிக்கெட்டுகளும் ஆன்லைன் மற்றும் நேரில் விற்பனை களை கட்டியுள்ளது.

இந்நிலையில், “அண்ணாத்தை படத்திற்கு ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு டிக்கெட் விலை ரூ.2925. இப்படி நடித்து கொள்ளை அடிக்கும் கும்பல் இருக்கும் வரை நாடு உருப்படாது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை கொள்ளையர்கள் ஏமாற்றிக் கொண்டேதான் இருப்பார்கள்” என்பதாக காசி டாக்கீஸ் “அண்ணாத்த” திரைப்பட டிக்கெட்டுடன் வைரல் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இயக்குனர் களஞ்சியத்தின் பதிவைத் தொடர்ந்து இந்த செய்தி வைரலாகிறது. ஆனால், அவர் பதிவை நீக்கிவிட்டார்.

ரஜினிகாந்த்
Source: Facebook

Facebook Link

ரஜினிகாந்த்
Source: Facebook

Facebook Link

ரஜினிகாந்த்
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: புனித் ராஜ்குமார் மயங்கி விழுந்த கடைசி நிமிட சிசிடிவி காட்சி என்று பரவும் தவறான வீடியோ!

Fact check/ Verification

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் ஒரு டிக்கெட் விலை ரூ.2925 என்பதாக பரவும் புகைப்படத்தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

முதலில் குறிப்பிட்ட வைரல் புகைப்படத்திலேயே சீட் நம்பர், எம் வரிசையில் 1-15 வரையில் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அட்மிட்ஸ், அதாவது இந்த டிக்கெட்டில் படம் பார்க்கக் கூடிய நபர்களின் எண்ணிக்கையும் 15 என்று குறிப்பிடப்பட்டுள்ளது நமக்கு உறுதியானது.

ரஜினிகாந்த்

மேலும், இதுகுறித்து காசி டாக்கிஸ் தரப்பிலும் கேட்டு உறுதி செய்து கொண்டோம். காசி டாக்கீஸில் அதிகபட்ச விலையாக ரூ.200 வரையில் அண்ணாத்த திரைப்பட டிக்கெட்டுகள் விற்கப்பட்டு வருகின்றது என்பதும் அவர்களுடைய இணையதளம் மூலம் உறுதியானது. முக்கியமாக எலைட் வரிசை ரூ.195க்கு டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. வைரலாகும் டிக்கெட் புகைப்படமும் எலைட் வரிசையைச் சார்ந்தது.

தொடர்ந்து இதுகுறித்து ரெட் ஜெயண்ட் மூவிஸின் இணை தயாரிப்பாளரான செண்பகமூர்த்தியிடம் பேசினோம். அப்போது அவர், “குறிப்பிட்ட தகவல் தவறாக பரவி வருகிறது. 15 பேருக்கான டிக்கெட்டுகளையும் தற்போது டிஜிட்டல் முறையில் ஒரே காகிதத்தில்தான் கொடுக்கப்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஒரு டிக்கெட்டின் விலை 2000க்கும் மேல் என்பதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானதாகும்” என்று தெரிவித்தார்.

Conclusion:

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் ஒரு டிக்கெட் விலை ரூ.2925 என்பதாக பரவும் புகைப்படத்தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Misleading

Our Sources:

Kaasi Talkies

Red giant Movies

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular