திங்கட்கிழமை, ஜூன் 24, 2024
திங்கட்கிழமை, ஜூன் 24, 2024

HomeFact Checkஉடன்கட்டை ஏறுதல் தமிழர் கலாச்சாரம் என்று நாராயணன் திருப்பதி கூறியதாக மீண்டும் பரவும் போலி நியூஸ்கார்ட்!

உடன்கட்டை ஏறுதல் தமிழர் கலாச்சாரம் என்று நாராயணன் திருப்பதி கூறியதாக மீண்டும் பரவும் போலி நியூஸ்கார்ட்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

உடன்கட்டை ஏறுதல் தமிழர்களின் கலாச்சாரம்; கணவன் இறந்த பிறகு பெண்கள் உடன்கட்டை ஏற வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Screenshot from Twitter @magizh_

Screenshot from Twitter @elayarjal

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பிரான்ஸில் சாலையில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் அகற்றப்பட்டனரா? உண்மை என்ன?

Fact Check/Verification

உடன்கட்டை ஏறுதல் தமிழர் கலாச்சாரம் என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

வைரலாகும் இத்தகவல், தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி பரப்பப்படும் நிலையில், கடந்த ஜூன் மாதம் முதலே இச்செய்தி வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவியது நமக்குத் தெரிய வந்தது.

கடந்த ஜூன் 22, 2022 அன்றே நாம் குறிப்பிட்ட வைரல் நியூஸ்கார்ட் போலியானது என்று ஆய்வறிந்து கூறியுள்ளோம். அதற்கான கட்டுரையை இங்கே மீண்டும் ஷேர் செய்துள்ளோம்.

தொடர்ந்து, குறிப்பிட்ட நியூஸ்கார்ட் குறித்து தந்தி டிவி தரப்பில் அதன் இணை ஆசிரியர் அசோக வர்ஷினியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் குறிப்பிட்ட நியூஸ்கார்ட் போலியானது என்று விளக்கமளித்தார்.

கடந்த முறையே, பாஜகவின் சமூக ஊடக அணித்தலைவர் சிடிஆர் நிர்மல் குமார், இத்தகவல் பொய்யானது என்று நமக்கு உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரைத் தொடர்பு கொண்டு மீண்டும் குறிப்பிட்ட செய்தி போலியானது என்று உறுதி செய்து கொண்டோம்.

Conclusion

உடன்கட்டை ஏறுதல் தமிழர் கலாச்சாரம் என்று பாஜக நாராயணன் திருப்பதி கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் பொய்யானது என்று நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகின்றது.

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

Result: False

Phone Confirmation with Ashoka varshini, Thanthi Tv, Dated 01, 2023
Phone Conversation with CTR Nirmalkumar, BJP IT Wing President, Dated 01, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular