Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
தமிழ்நாட்டில் வீடுவீடாகச் சென்று ஆர்எஸ்எஸ் அமைப்பினர் எய்ட்ஸை உருவாக்கும் ஹெச்.ஐ.வி வைரஸை பரப்புவதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது
சமூக ஊடகங்களில் அரசியல் சூழ்நிலைகளுக்கு இணையாக மருத்துவம் மற்றும் அறிவியல் சார்ந்த வதந்திகளும் மக்களிடையே எப்போதும் ஷேர் செய்யப்படும்.
அவ்வகையில், “அவசரம்…அவசரம். யாராவது உங்கள் வீட்டு வாசலுக்கு வந்து நாங்கள் மருத்துவக் கல்லூரியிலிருந்து வருகிறோம். உங்கள் இரத்தத்தில் சர்க்கரை இருக்கிறதா என இலவசமாகப் பரிசோதனை செய்து தருகின்றோம் எனக் கூறினால் உடனடியாக விரட்டுங்கள் அல்லது போலீஸில் பிடித்துக் கொடுங்கள்.
அவர்கள் ஆர்எஸ்எஸ் (RSS) தீவிரவாத அமைப்பினால் எச்.ஐ.வி எய்ட்ஸ் வைரஸைப் பரப்புவதற்காக அனுப்பி வைக்கப்பட்டவர்கள்; வீட்டில் உள்ளவர்கள், அன்பர்கள், நண்பர்கள் அனைவருக்கும் வந்தபடியே பகிர்ந்து கொள்ளுங்கள். “ என்று தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு வெளியிட்டதாக தகவல் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மங்களூரில் தொண்டர்கள் ஆரவாரம் செய்ததாக பழைய வீடியோவை பரப்பும் பாஜகவினர்
Fact Check/Verification
தமிழ்நாட்டில் சர்க்கரை அளவு பரிசோதிப்பதாக கூறி மக்களுக்கு ஹெச்.ஐ.வி வைரஸை பரப்பும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளதாகப் பரவுகின்ற செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
தமிழக காவல்துறையின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களில் ஆராய்ந்தபோது அவர்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வைரலாகும் இச்செய்தி பொய்யானது என்று தமிழக காவல்துறையினர் மறுப்பு தெரிவித்திருந்ததை காண முடிந்தது.
மேலும் தேடுகையில் அரியலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட காவல்துறையின் ஃபேஸ்புக் பக்கங்களிலும் வைரலாகும் இத்தகவல் பொய்யானது என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.
இதனடிப்படையில் பார்க்கையில், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் எய்ட்ஸை உருவாக்கும் ஹெச்.ஐ.வி வைரஸை பரப்புவதாக பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகின்றது. இதேபோல், இதற்கு முன்னர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் எய்ட்ஸை உருவாக்கும் ஹெச்.ஐ.வி வைரஸை பரப்புவதாக தகவல் ஒன்று வைரலானது. இத்தகவலை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆராய்ந்து, அது பொய்யான செய்தி என்று நிரூபித்துள்ளோம். அச்செய்தியை இங்கே படிக்கலாம்.
Conclusion
தமிழ்நாட்டில் சர்க்கரை அளவு பரிசோதிப்பதாக கூறி மக்களுக்கு ஹெச்.ஐ.வி வைரஸை பரப்பும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளதாகப் பரவுகின்ற செய்தி போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
Tweet by Tamilnadu Police on September 03, 2022
Chengalpattu police’s and Ariyalur Police’s Facebook Post
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.