RSS தலைவர் மோகன் பகவத்துடன் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி இருப்பதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

“இப்பொழுது தெரிகிறதா யார் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிறார் என்று.. மோகன் பகவத் பக்கத்தில் அமர்ந்திருப்பது சாட்சாத் ஓவைசிதான் இன்னும் இவரை சில முஸ்லிம்கள் நம்புவார்கள்” என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இப்படத்தில் RSS தலைவர் மோகன் பகவத்துடன் ஓவைசி அமர்ந்திருப்பதாக உள்ளது.



Also Read: அமைச்சர் சேகர்பாபுவுக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்தாரா?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
RSS தலைவர் மோகன் பகவத்துடன் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி இருப்பதாக கூறி புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து, இதன் உண்மைத்தன்மை குறித்து அறிய அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.
இதில் இப்படம் எடிட் செய்யப்பட்டு போலியாக உருவாக்கப்பட்டது என்கிற உண்மையை நம்மால் அறிய முடிந்தது. இருவேறு இடங்களில், இருவேறு சந்தர்பங்களில் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்களை ஒன்றாக இணைத்து இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது.
துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கடந்த ஆண்டு விருந்து ஒன்று அளித்தார். இவ்விருந்தில பல அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் கலந்துக் கொண்டனர். இவ்விருந்தில் மோகன் பகவத்தும் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங்கும் ஒன்றாக இருக்கும் படம் ஒன்று அப்போது ஊடகங்களில் செய்திப் பொருளானது.

இந்த புகைப்படத்தை எடிட் செய்தே சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையானப் படத்தையும், எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காண்பித்துள்ளோம்.


அதேபோல் கடந்த 2017 ஆம் ஆண்டு ஓவைசியை இங்கிலாந்து தூதர் ஒருவர் அவரது வீட்டில் வைத்து சந்தித்துள்ளார்.
இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட படமே வைரலாகும் போலி படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. உண்மையானப் படமும், எடிட் செய்யப்பட்ட படமும் கீழே ஒப்பிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது.


Also Read: பிரியாணியை தடை செய்ய வேண்டும் என்றாரா அண்ணாமலை?
Conclusion
RSS தலைவர் மோகன் பகவத்துடன் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி இருப்பதாக கூறி பரவும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது உரிய ஆதாரங்களுடன் தெளிவாகின்றது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered
Source
New Indian Express
Asaduddin Owaisi
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)