பிரியாணியை தடை செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்டுகள் சில சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

“பிரியாணி சாப்பிடுபவர்கள் இந்துக்கள் இல்லை. பிரியாணி, கிரில் சிக்கன், பார்பிக்யூ போன்ற அந்நிய உணவுகளை தடை செய்ய வேண்டும்“ என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்டுகள் சில வைரலாகி வருகின்றது.


Also Read: அமைச்சர் சேகர்பாபுவுக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்தாரா?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
பிரியாணியை தடை செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்டுகள் வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
தந்தி தொலைக்காட்சி மற்றும் நியூஸ் 7 தமிழின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், முன்னதாக நியூஸ் 7 தமிழ் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் நியூஸ் 7 தமிழ் வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை. மாறாக இந்த நியூஸ்கார்ட் பொய்யானது என்று நியூஸ் 7 தமிழ் சார்பில் வெளியிடப்பட்டிருந்த மறுப்பு பதிவையே காண முடிந்தது.
இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். தந்தி தொலைக்காட்சியும் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.
எனவே தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் துறையினரை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம். இதற்கு அவர்கள், இந்த நியூஸ்கார்ட் பொய்யானது, இதை நாங்கள் வெளியிடவில்லை என்று பதிலளித்தனர்.
இதனைத் தொடர்ந்து தேடியதில் தமிழக பாஜகவின் சமூக ஊடக அணி தலைவர் நிர்மல் குமாரும் வைரலாகும் இத்தகவல் பொய்யானது என்று அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.
Also Read: கே.என்.நேரு செய்தது மிகப்பெரிய தவறு என்று சொன்னாரா டிஆர்பி.ராஜா?
Conclusion
பிரியாணியை தடை செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது நம் ஆய்வின் மூலம் தெளிவாகின்றது.
இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Sources
Newschecker Conversations
CTR Nirmalkumar’s Tweet on 13 March
News 7 Tamil’s Tweet on 13 March
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)