திங்கட்கிழமை, பிப்ரவரி 26, 2024
திங்கட்கிழமை, பிப்ரவரி 26, 2024

HomeFact Checkபெண்ணின் வயிற்றிலிருந்து 4 அடி பாம்பு எடுத்ததாக வதந்தி

பெண்ணின் வயிற்றிலிருந்து 4 அடி பாம்பு எடுத்ததாக வதந்தி

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து 4 அடி அளவுள்ள பாம்பு எடுக்கப்பட்டதாக சமூக வலைத் தளங்களில் செய்தி ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.

பெண்ணின் வயிற்றில் பாம்பு என வைரலான வீடியோவின் ஸ்க்ரீன்ஷாட்
வைரலான செய்தி

Fact Check/Verification

சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அவ்வீடியோவில் ஒரு மருத்துவர் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து 4 அடி நீளமுள்ள ஏதோ ஒன்றை எடுக்கிறார்.

அவ்வீடியோ உங்களுக்காக:

IBC தமிழ்நாடு யூடியூப் சேனலில் வந்த வீடியோ.

இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

வீடியோவில் காணப்படும் அந்தப் பெண் ரஷ்யாவின் தகெஸ்தாமனைச் சார்ந்தவர் என்றும் அவர் வயிற்றிலிருந்து பாம்பு எடுக்கப்பட்டதாகவும் சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் தகவல் பரவி வருகின்றது.

இவ்வீடியோக் குறித்து தினமணி, தினத்தந்தி மற்றும் மாலை முரசு உள்ளிட்ட ஊடகங்களிலும் செய்தி வந்திருந்தது.

பெண்ணின் வயிற்றில் பாம்பு என தினமணியில் வந்தச் செய்தி
தினமணியில் வந்தச் செய்தி
பெண்ணின் வயிற்றில் பாம்பு என தினத்தந்தியில்  வந்தச் செய்தி
தினத்தந்தியில் வந்தச் செய்தி
பெண்ணின் வயிற்றில் பாம்பு எனமாலை முரசில் வந்தச் செய்தி
மாலை முரசில் வந்தச் செய்தி

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் இவ்வீடியோவின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவலை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆராய்ந்தோம்.

உண்மை என்ன?

வைரலாகும் இந்த வீடியோ குறித்து நாம் தேடுகையில், இச்சம்பவத்தில் தொடர்புள்ள மருத்துவர்கள், பாதிக்கப்பட்ட பெண் குறித்தத் தகவல்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றிலிருந்து ஏதோ ஒன்று எடுக்கப்பட்டது என்பது உண்மையே. ஆனால் அது பாம்பா என்பதே கேள்விக்குறி?

இதுக்குறித்து நாம் தேடுகையில், inverse.com எனும் இணையத் தளத்தில் “Can a snake crawl in your mouth as you sleep” எனும் தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.

inverse.com-ல் வந்தச் செய்தி
inverse.comல் வந்தச் செய்தி

இதில், அப்பெண்ணின் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்டது ஒரு புழுவாகவோ அல்லது குடலின் ஒரு பகுதியாகவோ  இருக்கலாம் என்றும் அது  பாம்பாக இருப்பதற்கான வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர். அதற்கு காரணங்களாக சிலவற்றைக் கூறியுள்ளனர்.

அவை:

  1. பாம்பு எப்போதும் மனிதர்களிடமிருந்து விலகி இருக்கவே விரும்பும். அவை எப்போதும் மனிதர்களை ஒரு அச்சுறுத்தலாகவே கருதும். ஒருவேளை அதற்கு வெப்பம் தேவைப்பட்டால் அது உங்கள் ஆடைகளுக்குள்தான் செல்லும்.
  2. ஒரு வேளை அது புழுவாக இல்லாமல் பாம்பாக இருந்தால், அதை விழுங்கி இருக்க வேண்டும். ஏனெனில் மனித குடலுக்குள் ஏதாவது போக வேண்டுமென்றால், அதை நாமாக விழுங்கினால் மட்டுமே முடியுமேயொழிய தானாக எதுவும் செல்ல முடியாது.

மேற்கண்ட காரணங்களை வைத்துப் பார்க்கும்போது வயிற்றிலிருந்து எடுக்கப்பட்டது பாம்பாக இருக்க வாய்ப்பே இல்லை.

Interesting Engineering எனும் இணையத்தளத்திலும் இதுக்குறித்து கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.

Interesting Engineering-ல் வந்தச் செய்தி
Interetsing Engineering-ல் வந்தச் செய்தி

இவர்களும் பெண்ணின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டது பாம்பாக இருக்க வாய்ப்பில்லை என்றே குறிப்பிட்டுள்ளனர்.

Conclusion

நம் விரிவான ஆய்வுக்குப்பின்  அப்பெண்ணின் உடலில் இருந்து எடுக்கப்பட்டது  குடலின் ஒரு பகுதியாகவோ அல்லது ஒரு நீண்ட புழுவாகவோ இருக்கலாம் என்பதும் அது கண்டிப்பாக பாம்பாக இருக்க வாய்ப்பில்லை என்பதும் தெளிவாகியுள்ளது.

Result: Misleading


Our Sources

Malai Murasu: https://www.malaimurasu.in/2020/09/02/snake-in-stomach/

Dinamani: https://www.dinamani.com/world/2020/sep/02/a-4-foot-long-snake-inside-the-womans-stomach-3458156.html

Daily Thanthi: https://www.dailythanthi.com/News/World/2020/09/02055203/A-4footlong-snake-taken-from-a-womans-abdomen–a-video.vpf

IBC Tamil YouTube Channel: https://www.youtube.com/watch?v=3Ea-NSSSekk

Interesting Engineering: https://interestingengineering.com/video-of-4-feet-snake-removal-from-womans-stomach-explained?fbclid=IwAR17POON2tecyf64yVX7Io4OsN75zsAlDQy5LrHrXt6L3592fvKktCzEVeI

Inverse.Com: https://www.inverse.com/science/can-a-snake-crawl-in-your-mouth-while-you-sleep?fbclid=IwAR2aTd_LOwsCKXeOwU-G5AMmpvINU9k137sAxSCJYlMbQ5dS5k7h4y8rfEs


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular