ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkசீனப் பேருந்தா? குஜராத் பேருந்தா? வைரலாகும் பதிவின் உண்மை பின்னணி!

சீனப் பேருந்தா? குஜராத் பேருந்தா? வைரலாகும் பதிவின் உண்மை பின்னணி!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: சீனப் பேருந்தை குஜராத் பேருந்து என்று பதிவிட்ட பாஜக ஆதரவாளர்.

Fact: உண்மையில் இது ஒரு கேலி பதிவாகும். பாஜகவை கிண்டலடிக்க இப்பதிவானது பதிவிடப்பட்டுள்ளது. இப்பதிவை பதிவிட்டவர் பாஜக ஆதரவாளர் அல்ல, பாஜக எதிர்ப்பாளர் ஆவார்.

சீனாவின் ஹாங்காங் நகரில் ஹைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி இயங்கும் மாடிப்பேருந்து முதன்முதலில் புழக்கத்தில் வந்துள்ளது.

இப்பேருந்தை குஜராத் மாநில பேருந்து என்று குறிப்பிட்டு ஒருவர் பதிவிட, அப்பதிவை பலரும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து, அவரை காரசாரமாக விமர்சித்து வருகின்றனர்.

சீனப் பேருந்தை குஜராத்  பேருந்து என்று பகிர்ந்த நபர்

Facebook Link

சீனப் பேருந்தை குஜராத்  பேருந்து என்று பகிர்ந்த நபர்

Facebook Link

சீனப் பேருந்தை குஜராத்  பேருந்து என்று பகிர்ந்த நபர்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தமிழகத்தில் ’என் மண் என் மக்கள்’ யாத்திரையால் மாற்றம் நிகழும் எனப் பாராட்டினாரா காங்கிரஸ் எம்பி ஜோதிமணி?

Fact Check/Verification

சீனப் பேருந்தை குஜராத்  பேருந்து என்று ஒருவர் பதிவிட்டதாக பதிவு ஒன்று வைரலானதை தொடர்ந்து, அப்பதிவை யார் பதிவிட்டார் என்பது குறித்து தேடினோம்.

இத்தேடலில் ஆனந்த்குமார் சித்தன் எனும் பெயரில் இயங்கும் ஃபேஸ்புக் பக்கத்திலேயே இப்பதிவானது பதிவிடப்பட்டுள்ளது என அறிய முடிந்தது.

சீனப் பேருந்தை குஜராத்  பேருந்து என்று பகிர்ந்த நபர்

தொடர்ந்து இதுக்குறித்து தேடுகையில் இப்பதிவின் கீழ் பல கமெண்ட்கள் கேலியாக போடப்பட்டிருப்பதையும், அந்த கமெண்டுகளுக்கு ஆனந்த்குமார் சித்தன் சிரிக்கும் ஈமோஜியை பதிலாக போட்டிருப்பதையும் காண முடிந்தது.

சீனப் பேருந்தை குஜராத்  பேருந்து என்று பகிர்ந்த நபர்

தொடர்ந்து ஆனந்த்குமார் சித்தனின் பக்கத்தை ஆய்வு செய்கையில், அப்பக்கத்தில் பாஜகவையும, பாஜக தலைவர்களையும் கிண்டலடித்து பல பதிவுகள் அப்பக்கத்தில் பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் பாஜகவை கிண்டலடித்து  ஆனந்த்குமார் சித்தன் பக்கத்தில் கேலியாக பதிவிடப்பட்டுள்ளது. அதை உணராமல், அவர் பாஜகவை சார்ந்தவர் என்று எண்ணி சமூக வலைத்தளங்களில் அவரை விமர்சித்து வருகின்றனர்.

Also Read: இந்தியா கூட்டணியின் பாட்னா பேரணி என்று பரவும் 2017ஆம் ஆண்டு புகைப்படம்!

Conclusion

சீனப் பேருந்தை குஜராத்  பேருந்து என்று பகிர்ந்த நபர், அதை கேலியாக பகிர்ந்துள்ளார் என்பதையும், அதை உணராமல் மற்றவர்கள் அவரை தாக்கி வருகின்றனர் என்பதையும் உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Satire

Our Sources
Facebook post, from ஆனந்த்குமார் சித்தன், Dated March 03, 2024
Self Analysis

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular