திங்கட்கிழமை, மே 6, 2024
திங்கட்கிழமை, மே 6, 2024

HomeFact Checkஇஸ்லாமியரான கணவர் இந்து மனைவியைத் தாக்கியதாகப் பரவும் தவறான வீடியோ தகவல்!

இஸ்லாமியரான கணவர் இந்து மனைவியைத் தாக்கியதாகப் பரவும் தவறான வீடியோ தகவல்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: இந்து மனைவியை அடிக்கும் முஸ்லீம் கணவன்
Fact: வைரலாகும் வீடியோவில் இடம்பெற்றுள்ள கணவன் – மனைவி இருவருமே இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்.

இஸ்லாமியரான கணவர் இந்து மனைவியைத் தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“*தான் எட்டி உதைத்த தன் அப்பாவை இங்கு வந்த பிறகு இது மாதிரி சமயங்களில் அடிக்கடி நினைவு கூர்கிறாள் சில நாட்களுக்கு முன்பு பலர் அவளுடைய சுதந்திரமான செயலை ட்விட்டரில் நியாயப்படுத்த முயன்றனர் இது மதமாற்ற ஜிஹாத் என்ற போது நீங்கள் ஒரு வெறுப்பாளர் என்றும், நீங்கள் இந்து முஸ்லீம் பற்றி” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.

Screenshot from x @NaMo_Bharathan

X Link/Archived Link

Screenshot from x @14Sathya

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டாரா நடிகர் அல்லு அர்ஜுன்?

Fact Check/Verification

இஸ்லாமியரான கணவர் இந்து மனைவியைத் தாக்கியதாகப் பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அப்போது, வைரலாகும் வீடியோவைப் பகிர்ந்து கடந்த ஜூன் 08, 2023ஆம் ஆண்டு X பயனாளர் ஒருவர் உத்திரபிரதேச காவல்துறையையும் அதன் கீழ் இணைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அந்த வீடியோவிற்கு பதிலளித்த இட்டாவா மாவட்ட காவல்துறை, குறிப்பிட்ட சம்பவம் குறித்து பகேவார் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து Zee News, punjab Kesari உள்ளிட்ட ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, சிவம் யாதவ் என்கிற நபர் தனது மனைவியைக் கட்டையால் தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து அப்பெண்ணின் தாயார் போலீசில் புகார் என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, எம்எஸ்எஸ் நியூஸ் என்கிற யூடியூப் பக்கத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த பேட்டியிலும் கணவர் சிவம் யாதவ், மனைவி ஜோதி யாதவ் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, குறிப்பிட்ட வீடியோ இடம்பெற்றுள்ள கணவன் – மனைவி இருவருமே இந்து என்பதை அறிய முடிந்தது.

 Also Read: உயர்சாதி பெண்களை பறையர் இன ஆண் மணந்தால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று திமுக அறிவித்ததா?

Conclusion

இஸ்லாமியரான கணவர் இந்து மனைவியைத் தாக்கியதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
News Report From, Punjab Kesari, Dated June 04, 2023
YouTube video From, Mss News



(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular