Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
யூடிபர் சாட்டை துரைமுருகன் கைதை கிண்டலடித்து, நாதக நன்கொடை கேட்டதாக அறிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
குமரி மாவட்டத்தின் தக்கலை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சி குறித்து சர்ச்சைகுரிய கருத்துக்களைப் பேசியுள்ளார் யூடியூபர் சாட்டை துரைமுருகன். இதன் காரணமாக அவர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நாங்குநேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நாதக வெளியிட்டதாக கூறி அறிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த அறிக்கையில், நமது கட்சியின் நீண்ட கால ஆபாச அண்டா “சேட்டை துரைமுருகன்” திராவிட கட்சிகளின் முகத்திரையை கிழிக்கும்போது லேசுபாசாக சில வார்த்தைகளை பேசிவிட்டார். அதனால் தம்பியை சிறையில் தள்ளி நசுக்கி பிதுக்கி எடுக்க திருட்டு திராவிடம் முடிவு செய்துள்ளது. ஆகவே இந்த இக்கட்டான சூழ்நிலையில் தம்பியின் சேதாரத்தை ஈடுகட்டவும், அந்த சோகத்தையும் வலியையும் மறக்க ஜாக் டேனியல் என்று பெயர்கொண்ட “தன்னிலை மறப்பான்” பானத்தை வாங்கி கொடுக்க உங்களிடம் கையேந்தி நிற்கிறோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை சவுக்கு சங்கர் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவை இதுவரை 706 பேர் விரும்பியுள்ளனர், 96 பேர் மறுகீச்சு செய்துள்ளனர், 35 பேர் மேற்கோள் கீச்சு செய்துள்ளனர்.
இவரைத் தொடர்ந்து பலரும் இந்த அறிக்கையை பகிர்ந்து வருகின்றனர்.
Also Read: ஹெச்.ராஜா தலைமறைவு என்று பரவும் நியூஸ்கார்டுகள் உண்மையானதா?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
சமூக வலைத்தளங்களில் சாட்டை துரைமுருகன் குறித்து வைரலாகி வரும் மேற்கூறிய அறிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகங்களை காணும்போதே அது போலியாக எடிட் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது என்பதை உணர முடிகின்றது.
இருப்பினும் பலர் இதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவதால் இதுக்குறித்து முழுமையாக ஆய்வு செய்து விளக்க முடிவு செய்தோம். ஆகவே நாம் தமிழர் கட்சியின் மக்கள் தொடர்பு பிரிவு பாக்யராஜனிடம் வைரலாகும் அறிக்கை குறித்து பேசினோம்.
நமக்கு இதுகுறித்து விளக்கமளித்த அவர், “இது முற்றிலும் போலியான அறிக்கை. எங்கள் கட்சியின் லெட்டர் பேடை எடிட் செய்து இதுபோன்ற பொய் செய்தி பரப்புவது கண்டனத்துக்குரியது” என்றார்.
இதைத் தவிர்த்து பார்க்கையில் வைரலாகும் அறிக்கையில் நாம் தமிழர் கட்சியின் பதிவு எண் வழக்கமான இடத்தில் காணப்படவில்லை. அதேபோல் கடித எண்ணும் இடம்பெறவில்லை. லெட்டர்பேடின் டிசைனும் நாதகவின் லெட்டர் பேட் டிசைனோடு ஒத்துபோகவில்லை.
வாசகர்களின் புரிதலுக்காக வைரலாகும் அறிக்கையையும் நாதகவின் அண்மை அறிக்கையையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது நாதக வெளியிட்டதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அறிக்கை முற்றிலும் போலியானது என்பது தெள்ளத் தெளிவாக உறுதியாகின்றது.
Also Read: முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தமிழ்நாட்டில் இந்த ரேஷன் கட்டுப்பாடுகளை அறிவித்ததா?
யூடிபர் சாட்டை துரைமுருகன் கைதை கிண்டலடித்து, நாதக நன்கொடை கேட்டதாக வைரலாகும் அறிக்கை முற்றிலும் போலியாக எடிட் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
NTK Spokesperson’s Testimonial
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
May 28, 2025
Vijayalakshmi Balasubramaniyan
May 5, 2025
Vijayalakshmi Balasubramaniyan
April 9, 2025