நாம் தலைவர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கோட்சேவை மாவீரன் என்று புகழ்ந்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சந்தனக் கடத்தல் மன்னன் என்றழைக்கப்பட்டு ஏறக்குறைய 30 வருடங்களாக தமிழகம் மற்றும் கர்நாடகப் போலீசால் தேடப்பட்டு வந்தவர் வீரப்பன். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழக அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவருக்கு அண்மையில் நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை அம்பத்தூர் பகுதியில் நினைவு கொடிக்கம்பம் ஏற்படுத்தப்பட்டு, அதில் நாம் தமிழர் கட்சியின் கொடியை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்வானது ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளக்களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சீமான் காந்தியடிகளை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவை மாவீரன் என்று புகழ்ந்து, அவருக்கு புகழ்வணக்கம் செலுத்தியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திமுக கூட்டணியிலிருந்து விசிக விலகுகின்றதா?
Fact check/ Verification
சீமான் கோட்சேவை மாவீரன் என்று புகழ்ந்ததாக நாம் தமிழர் கட்சியின் நியூஸ்கார்ட் ஒன்று வைரலான நிலையில், இதன் உண்மை பின்னணி குறித்து அறிய நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளர் பாக்கியராஜ் அவர்களைத் தொடர்புக் கொண்டு இதுக்குறித்து கேட்டோம்.
இதற்கு அவர்,
“இது முற்றிலும் போலியாக உருவாக்கப்பட்ட நியூஸ்கார்ட். சிவாஜி கணேசன் பிறந்தநாளில் அவருக்கு புகழ் வணக்கம் செலுத்தி நியூஸ்கார்ட் ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதை எடிட் செய்தே இதுபோன்ற பொய்யான தகவல் பரப்பப்படுகின்றது.”
என்று விளக்கமளித்தார்.
இதனையடுத்து சீமான் அவர்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து தேடினோம்.
இந்த தேடலில்,
“தான் ஏற்றுக்கொண்ட பாத்திரங்களுக்கு தன் பாவனைகளால் உயிரூட்டி தமிழர் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட மண்ணின் மகத்தான கலைஞன், அதிஅற்புதமான நடிப்பாற்றலால் தமிழ்த்திரைக்கலையை உலகத்தரத்திற்கு உயர்த்திய பெருமகன், ஐயா சிவாஜி கணேசன் அவர்களது பிறந்தநாளில் பெருமிதத்தோடு புகழ் வணக்கம் செலுத்துவோம்”
என்று மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி சீமான் அவர்கள் டிவீட் செய்திருந்ததை காண முடிந்தது.
இந்த டிவீட்டில் பயன்படுத்தப்பட்டிருந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே மேற்கண்ட தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்ட் உண்மையான நியூஸ்கார்ட்
மேற்கிடைத்த ஆதாரங்களின்படி காணும்போது கோட்சேவை மாவீரன் என்று சீமான் புகழ்ந்ததாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது உறுதியாகின்றது.
Also Read: திமுக சுயசாதி வெறியை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றாரா திருமாவளவன்?
Conclusion
சீமான் அவர்கள் கோட்சேவை மாவீரன் என்று புகழ்ந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
NTK’s PRO Bakkiyaraj’s Testimonial:-
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)