Entertainment
மாமியாருக்கு சோப்பு போடும் காட்சியை அனுபவித்து நடித்தேன் என்றாரா விஜய்?
Claim: மாமியாருக்கு சோப்பு போடும் காட்சியை அனுபவித்து நடித்தேன் என்றார் விஜய்.
Fact: வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும். உண்மையில் அவர் மற்றொரு காட்சியையே அனுபவித்து நடித்ததாக கூறினார்.
ரசிகன் திரைப்படத்தில் மகள் என்று நினைத்து மாமியாருக்கு சோப் போடும் காட்சியை மிகவும் அனுபவித்து ரசித்து நடித்தேன் என்று நடிகர் விஜய் கூறியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகா மெட்ரோ ரயில் நிலையத்தில் சாவர்க்கர் ஓவியம் வரையப்பட்டதா?
Fact Check/Verification
மாமியாருக்கு சோப்பு போடும் காட்சியை அனுபவித்து நடித்தேன் என்று நடிகர் விஜய் கூறியதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் ‘இதுதான் தளபதி ஸ்டைல்! என்று தலைப்பிட்டு ஜூன் 25, 2019 அன்று சன் மியூஸிக் எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜயின் இதே நேர்காணல் வீடியோ பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
அவ்வீடியோவை முழுமையாக கண்டப்பின் வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என அறிய முடிந்தது.
உண்மையில் அவ்வீடியோவில், “தவறுதலாக மாமியாருக்கு சோப்பு போட்ட பின் நான் மாட்டிக்கொள்வேன். அதன் பின் வரும் காட்சியில் என்னை திட்டுவார்கள். அதற்கு நான் பயந்து பேசுமாறு ஒரு வசனம் கொடுத்தார்கள். நான் அதை வேண்டாம் என்று கூறிவிட்டு, வெறும் பாவனைகள் வாயிலாகவே நடித்தேன். அந்த காட்சியை மிகவும் அனுபவித்து, ஆர்வத்துடன் நடித்தேன்” என்றே விஜய் பதிலளித்திருந்தார்.
Also Read: பாரத மாதாவை அவமதித்து பேசினாரா ராகுல் காந்தி?
Conclusion
மாமியாருக்கு சோப்பு போடும் காட்சியை அனுபவித்து நடித்தேன் என்று நடிகர் விஜய் கூறியதாக வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered video
Our Sources
X Post from Sun Music, Dated June 25, 2019
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)