“கஞ்சா போதை தகப்பன் காலை வெட்டிய மகன். மத்தபடி எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பிறகு 2023 ஆம் ஆண்டில் பொது நிகழ்ச்சி ஒன்றில் எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாது அளவிற்கு ஆட்சி நடத்தி வருகிறோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசி இருந்தார். இதை மேற்கோள் காட்டியே வைரலாகும் வீடியோ பரப்பப்பட்டு வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கீழ்சாதியை சார்ந்தவர் கோவிலுக்குள் நுழைந்ததால் மேல்சாதியினரால் தாக்கப்பட்டாரா?
Fact Check/Verification
திமுக ஆட்சியில் கஞ்சா போதையில் தந்தையின் காலை மகன் வெட்டியதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, அவ்வீடியோ குறித்து தேடினோம்.
அத்தேடலில் இச்சம்பவமானது நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்ததாக நியூஸ் ஜே ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. இச்செய்தியானது மே 25, 2020 அன்று வெளியிடப்பட்டிருந்தது.

குன்னூர் வெலிங்க்டன் பகுதியை சார்ந்த ராஜாராம் என்பவன் கஞ்சா போதையில் இருக்கும்போது அவனது தந்தை ரவிச்சந்திரன் கண்டித்ததாகவும், இதனால் கோபமடைந்த ராஜாராம் ரவிச்சந்திரனை அரிவாளால் வெட்டியதாகவும் இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து ரவிச்சந்திரன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ராஜாராம் கைது செய்யப்பட்டதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து தேடுகையில் தந்தி டிவி, ஈடிவி பாரத், விகடன் உள்ளிட்ட ஊடகங்களிலும் 2020 மே மாதத்தில் இச்சம்பவம் குறித்து இதே தகவலுடன் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கிலும் இச்சம்பவம் 2020 ஆம் ஆண்டில் நடந்ததாக தெளிவுப்படுத்தியிருப்பதை காண முடிந்தது.
Also Read: ஆதவ் அர்ஜூனா எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்தாரா விஜய்?
Conclusion
திமுக ஆட்சியில் கஞ்சா போதையில் தந்தையின் காலை மகன் வெட்டியதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும்
உண்மையில் இச்சம்பவம் அண்மையில் நடக்கவில்லை; 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடந்ததாகும். அச்சமயத்தில் தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தது திமுக அல்ல; அதிமுகவாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report by News J, Dated May 25, 2020
Report by Thanthi TV, Dated May 25, 2020
Report by ETV Bharat, Dated May 25, 2020
Report by Vikatan, Dated May 25, 2020
X Post By TN Fact Check, Dated May 30, 2025