Fact Check
ஆதவ் அர்ஜூனா எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்தாரா விஜய்?
Claim
ஆதவ் அர்ஜூனா எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார் விஜய்.
Fact
இத்தகவல் தவறானது என்று எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார். அதேபோல் தவெக தரப்பும் இந்த செய்தி தவறானது என்று மறுத்துள்ளது.
தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன் பேசும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவ்வீடியோவில் ஆதவ் அர்ஜூனா எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசி இருந்தார்.
இதை தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா அவ்வீடியோவில் பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாக அவரது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசியில் பேசி நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தாக தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கீழ்சாதியை சார்ந்தவர் கோவிலுக்குள் நுழைந்ததால் மேல்சாதியினரால் தாக்கப்பட்டாரா?
Fact Check/Verification
ஆதவ் அர்ஜூனா எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசியதற்கு தவெக தலைவர் விஜய் எடப்பாடி பழனிசாமியிடம் வருத்தம் தெரிவித்ததாக பரப்பப்படும் தகவல் நியூஸ் தமிழ் மற்றும் பாலிமர் நியூஸ் ஊடகங்களில் வெளிவந்த செய்தியின் அடிப்படையிலேயே பரப்பப்படுவதால் இந்த ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டதா என தேடினோம்.
இத்தேடலில் இச்செய்தியை இந்த ஊடகங்கள் வெளியிட்டு, பின்னர் நீக்கி இருப்பதை அறிய முடிந்தது.


இதனையடுத்து தேடியதில் எடப்பாடி பழனிசாமி பத்திரிக்கையாளர்களிடம் விஜய் தன்னுடன் பேசவில்லை என்று மறுத்திருப்பதை காண முடிந்தது.
தொடர்ந்து தேடுகையில் தவெக துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல்குமார், கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் இச்செய்தி பொய்யானது என்று அவர்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.


Also Read: பாகிஸ்தான் இராணுவத்தை பலுசிஸ்தான் கிளர்ச்சி படையினர் தாக்கியதாக பரவும் வீடியோ உண்மையானதா?
Conclusion
ஆதவ் அர்ஜூனா எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசியதற்கு தவெக தலைவர் விஜய் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசியில் வருத்தம் தெரிவித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report by Puthiya Thalaimurai, Dated June 1, 2025
X Post By CTR Nirmalkumar, Deputy General Secretary, TVK, Dated June 1, 2025
X Post By Rajmohan, Propaganda Secretary, TVK, Dated June 1, 2025