Fact Check
ஒடிசா விபத்தில் தொடர்புடைய இஸ்லாமிய என்ஜினியர் தலைமறைவா?
Claim: ஒடிசா விபத்தில் தொடர்புடைய இஸ்லாமிய என்ஜினியர் அமீர்கான் தலைமறைவு
Fact: தென் கிழக்கு ரயில்வே இதை மறுத்துள்ளது.
ஒடிசா கோர ரயில் விபத்து தொடர்பான சிபிஐ விசாரணை வளையத்தில் இருந்த ஜூனியர் என்ஜினியர் அமிர்கான் என்பவர் குடும்பத்துடன் தலைமறைவானதாகவும், விசாரணைக்காக பாலசோர் பகுதியில் உள்ள அவரின் வீட்டிற்கு சென்றபோது அங்கு யாரும் இல்லாததால் அவரின் வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்ததாகவும் ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.




சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மணிப்பூரில் சுட்டுக்கொல்லப்படும் பெண்கள் என்று பரவும் மியான்மர் வீடியோ!
Fact Check/Verification
ஒடிசா விபத்தில் தொடர்புடைய இஸ்லாமிய என்ஜினியர் அமீர்கான் தலைமறைவானதாக தகவல் ஒன்று ஊடகங்களில் வந்ததை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
இந்த ஆய்வில் இத்தகவல் தவறானது என அறிய முடிந்தது. தென்கிழக்கு ரயில்வேயின் தலைமை தகவல் தொடர்பாளர் ஆதித்ய குமார் சௌத்ரி இத்தகவலானது தவறானது என தெளிவு செய்துள்ளார்.
இத்தகவல் குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், “ஊழியர் ஒருவர் தலைமறைவானதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இத்தகவல் தவறானதாகும். விசாரணையில் மொத்த ஊழியர்களும் இருக்கின்றார்கள். விசாரணையில் அவர்கள் ஆஜராகி முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள்” என்று கூறியுள்ளார்.
Also Read: செங்கோலில் பெரியார் முகம் பொறித்திருந்ததால் வாங்க மறுத்தாரா சித்தராமையா?
Conclusion
ஒடிசா விபத்தில் தொடர்புடைய இஸ்லாமிய என்ஜினியர் அமீர்கான் தலைமறைவானதாக ஊடகங்களில் வந்த செய்தி தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Tweet from @SpokespersonIR, Dated June 20, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)