Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
தவெக தலைவர் விஜய் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வாங்கிய கேரவன்
வைரலாகும் புகைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து இணையத்தில் பிரித்விராஜ் வாங்கிய கேரவன் என்று இடம்பெற்றுள்ளது.
தவெக தலைவர் விஜய் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வாங்கிய கேரவன் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”மாநாட்டில் விஜய் தங்குவதற்கு 100 கோடி செலவில் வர வரவழைக்கபட்ட அதிநவீன சொகுசு வாகனம். இவர் தான் ஏழையின் கண்ணீரை துடைக்க போகிறார்” என்று இந்த புகைப்படம் பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தவெக மதுரை மாநாட்டுக்கு கூடிய கூட்டமா இது
தவெக தலைவர் விஜய் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வாங்கிய கேரவன் என்று பரவும் இந்த புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை கீ-வேர்ட்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த நவம்பர் 07, 2014ஆம் ஆண்டு Team BHP என்கிற இணையதளத்தில் மலையாள நடிகர் பிரித்விராஜின் கேரவன் என்று குறிப்பிட்டு இந்த புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

மேலும், Ojes Automobiles என்னும் சமூக வலைத்தளப்பக்கத்தில் ”பிரித்விராஜின் முதல் Ojes கேரவன்” #ThrowBack என்று இந்த புகைப்படத்தில் உள்ள அதே கேரவனுடன் பிரித்விராஜ் இருக்கும் புகைப்படமும், கேரவனின் மற்ற சில புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது.

இப்புகைப்படத்தையே தற்போது மாநாட்டிற்காக தவெக தலைவர் விஜய் வாங்கிய கேரவன் என்று பரப்பி வருகின்றனர்.
Also Read: ராகுல் காந்தியின் பீகார் யாத்திரைக்கு கூடிய கூட்டமா இது?
தவெக தலைவர் விஜய் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வாங்கிய கேரவன் என்று பரவும் புகைப்படம் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Photos By, Team BHP, Dated November 07, 2014
Facebook Post By, Ojes Automobiles, Dated April 11, 2021
Ramkumar Kaliamurthy
November 28, 2025
Ramkumar Kaliamurthy
October 24, 2025
Ramkumar Kaliamurthy
November 26, 2025