வெறும் பேச்சு! – ஸ்டாலின் புஸ்ஸ் என்று தலைப்பிட்டு ஜூனியர் விகடன் அட்டைப்படம் வெளியிட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

வெறும் பேச்சு! – ஸ்டாலின் புஸ்ஸ் என்று தலைப்பிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காற்றுப் போன பலூனாக கீழே விழுவது போன்ற ஒரு அட்டைப்படத்தை ஜூனியர் விகடன் வெளியிட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இப்படத்தை பலரும் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மங்களூரில் தொண்டர்கள் ஆரவாரம் செய்ததாக பழைய வீடியோவை பரப்பும் பாஜகவினர்
Fact Check/Verification
வெறும் பேச்சு! – ஸ்டாலின் புஸ்ஸ் என்று தலைப்பிட்டு ஜூனியர் விகடன் அட்டைப்படம் வெளியிட்டதாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
அந்த ஆய்வில் வைரலாகும் ஜூனியர் விகடன் அட்டைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிந்தது. உண்மையில் ஜூனியர் விகடன் ‘வெறும் பேச்சு! – அண்ணாமலை புஸ்ஸ்…‘ என்று தலைப்பிட்டு, அண்ணாமலை உருவத்தையே அட்டைப்படமாக வெளியிட்டுள்ளது.
ஜூனியர் விகடன் இச்செய்தியை, “ஊதி ஊதிப் பெரிதாக்கப்படும் பலூன், நாளடைவில் காற்று இறங்கி, சுருங்கிப்போய்விடும். அதுபோலவே காற்று இறங்கி, `புஸ்ஸ்’ ஆகியிருக்கிறது பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிம்பமும்” என்று தலைப்பிட்டு டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளது.
ஜூனியர் விகடன் அண்ணாமலைக்காக வெளியிட்ட படத்தையும், தலைப்பையும் எடிட் செய்து வைரலாகும் அட்டைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான அட்டைப் படத்தையும், எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனைத் தொடர்ந்து விகடன் ஆசிரியர் குழுவில் ஒருவரான ஐ.பிரிட்டோவைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் அட்டைப்படம் குறித்து விசாரிக்கையில், அது போலியான அட்டைப் படம்’ என்று அவரும் உறுதி செய்தார்.
Also Read: பாகிஸ்தான் இராணுவத் தளபதி மகனுடன் ஜெய் ஷா சந்திப்பு என்று பரவும் படம் உண்மையானதா?
Conclusion
வெறும் பேச்சு! – ஸ்டாலின் புஸ்ஸ் என்று தலைப்பிட்டு ஜூனியர் விகடன் அட்டைப்படம் வெளியிட்டதாக பரவும் புகைப்படம் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Image
Sources
Tweet fom Junior Vikatan on September 02, 2022
Phone Conversation with I.Britto, Vikatan, on September 07, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)