சனிக்கிழமை, ஜூன் 22, 2024
சனிக்கிழமை, ஜூன் 22, 2024

HomeFact Checkவிஜயகாந்த் திராவிட இயக்கம் போட்ட பிச்சையால் திரைத்துறையில் வென்றார் என்றாரா மு.க.ஸ்டாலின்?

விஜயகாந்த் திராவிட இயக்கம் போட்ட பிச்சையால் திரைத்துறையில் வென்றார் என்றாரா மு.க.ஸ்டாலின்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: விஜயகாந்த் திராவிட இயக்கம் போட்ட பிச்சையால் திரைத்துறையில் வென்றார் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Fact: இத்தகவல் தவறானது என்று திமுக தரப்பும், சன் நியூஸ் தரப்பும் தெளிவு செய்துள்ளது.

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த வியாழனன்று (28/12/2023) காலமானார். தீவுத்திடலில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த அவரது உடல் வெள்ளிக்கிழமை அன்று 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் “விஜயகாந்த் திரைத்துறையில் வெற்றி பெற்றது திராவிடம் இயக்கம் போட்ட பிச்சை. என்றைக்குமே அவர் திராவிட இயக்கத்திற்கு நன்றிக்கடன் பட்டவர்” என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விஜயகாந்த் குறித்து  பேசியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

விஜயகாந்த் திராவிட இயக்கம் போட்ட பிச்சையால் திரைத்துறையில் வென்றார் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் தகவல்

Twitter Link | Archived Link

விஜயகாந்த் திராவிட இயக்கம் போட்ட பிச்சையால் திரைத்துறையில் வென்றார் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் தகவல்

Archived Link

விஜயகாந்த் திராவிட இயக்கம் போட்ட பிச்சையால் திரைத்துறையில் வென்றார் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் தகவல்

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அயோத்தி இராமர் கோவிலில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டதாக பரவும் தவறான வீடியோ!

Fact Check/Verification

விஜயகாந்த் திராவிட இயக்கம் போட்ட பிச்சையால் திரைத்துறையில் வென்றார் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து, முன்னதாக ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகும் இத்தகவல் குறித்து ஆராய்ந்தோம்.

இதில் விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு அதுக்குறித்த பதிவு ஒன்றை முதல்வர் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.

அப்பதிவில் கூறியிருந்ததாவது:-

"அன்பிற்கினிய நண்பர் - தேசிய முற்போக்கு திராவிடக் கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன்.

நல்ல உள்ளத்திற்குச் சொந்தக்காரரான நண்பர் விஜயகாந்த் அவர்கள் திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான முத்திரைகளைப் பதித்த சாதனையாளர். நடிகராக, நடிகர் சங்கத் தலைவராக, அரசியல் கட்சித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஏற்றுக்கொண்ட பணி எதுவாக இருந்தாலும் அதில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன்னைச் சார்ந்த அனைவருக்கும் உறுதுணையாக இருந்தவர். குடும்ப நண்பராக என்னிடம் பழகியவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மீது என்றென்றும் தனிப்பாசம் கொண்டவர்.

தனது திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளைத் தலைவர் கலைஞர் தலைமையில் நடத்திய தமிழ் உணர்வாளரான நண்பர் விஜயகாந்த், நடிகர் சங்கத்தலைவராக இருந்தபோது தலைவர் கலைஞர் அவர்களின் கலையுலகப் பொன்விழாவைப் பாராட்டி, திரையுலகின் சார்பில் மாபெரும் விழா எடுத்து, தங்கப் பேனாவை பரிசாக அளித்தவர். தலைவர் கலைஞர் அவர்கள் உடல்நலன் குன்றியிருந்தபோது, நேரில் வந்து உடல்நலன் விசாரித்து சென்றதுடன், தலைவர் கலைஞர் மறைவெய்ந்தியபோது, வெளிநாட்டில் இருந்த நண்பர் விஜயகாந்த் கண்ணீர் மல்க காணொளி அனுப்பி தன் இரங்கலைத் தெரிவித்ததையும், வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் விமான நிலையத்திலிருந்து நள்ளிரவில் நேராகச் சென்னை கடற்கரையில் உள்ள தலைவர் கலைஞரின் ஓய்விடம் சென்று தன் வணக்கத்தைச் செலுத்தியதையும் எவரும் மறக்க முடியாது.

தமிழுணர்வும் தாராள மனமும் கொண்ட உன்னத மனிதரான நண்பர் விஜயகாந்த் அவர்களுடன் கலைத்துறையில் இணைந்து செயல்பட்ட காலங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வசனத்தில் விஜயகாந்த் கதாநாயகனான நடித்த ‘மக்கள் ஆணையிட்டால்’ என்ற படத்தில், கலைஞர் எழுதிய பாடல் காட்சியில் நானும் பங்கேற்றிருந்தது நினைவில் மலர்கிறது. அவருடனான நட்பு எந்தக் காலத்திலும், எத்தகைய அரசியல் சூழலிலும் மாறவேயில்லை. நண்பர் விஜயகாந்த் உடல்நலன் குன்றியிருந்த நிலையில், இரண்டு முறை நேரில் சென்று சந்தித்து, அவர் விரைந்து நலம் பெற விரும்பினேன். இயற்கை இரக்கமின்றி என் நண்பரின் வாழ்வை எடுத்துக் கொண்டிருக்கிறது.

கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும். இந்த மிகத் துயரமான சூழலில், என்னை நானே தேற்றிக் கொண்டு, கேப்டன் விஜயகாந்த்தை இழந்து தவிக்கும் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்களுக்கும், திரையுலகத்தினருக்கும், இரசிகர்களுக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.”

தமிழக முதல்வர் இப்பதிவில் குறிப்பிட்டதுபோல விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.

அதுபோல இப்பதிவில் எந்த ஒரு இடத்திலும் வைரலாகும் தகவலில் குறிப்பிட்டதுபோல் ‘விஜயகாந்த் திரைத்துறையில் வெற்றி பெற்றது திராவிடம் இயக்கம் போட்ட பிச்சை. என்றைக்குமே அவர் திராவிட இயக்கத்திற்கு நன்றிக்கடன் பட்டவர்போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்கவில்லை

இதனைத் தொடர்ந்து திமுகவின் ஐ.டி. விங்கை சேர்ந்த யுவராஜை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர் இத்தகவல் முற்றிலும் பொய்யானது“ என்று பதிலளித்தார்.

இதையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது சன் நியூஸின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் சன் நியூஸ் இவ்வாறு செய்தியை வெளியிட்டிருக்கவில்லை என அறிய முடிந்தது.

இதனையடுத்து சன் நியூஸின் டிஜிட்டல் துறை பொறுப்பாளர் மனோஜ்குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை சன் நியூஸ் வெளியிடவில்லை என்று பதிலளித்தார்.

Also Read: திமுக எம்பி செந்தில்குமார் கட்சியை விட்டு விலகியதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

Conclusion

விஜயகாந்த் திராவிட இயக்கம் போட்ட பிச்சையால் திரைத்துறையில் வென்றார் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
X post from M.K.Stalin, Chief Minister of Tamilnadu, Dated December 28, 2023
Phone Conversation with Yuvaraj, IT Wing, DMK
Phone Conversation with Manoj Kumar, Digital Head, Sun News


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular