ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact CheckFact Check: திருமாவளவனை திமுக உறுப்பினர் என்று குறிப்பிட்டதா சன் நியூஸ்?

Fact Check: திருமாவளவனை திமுக உறுப்பினர் என்று குறிப்பிட்டதா சன் நியூஸ்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: திருமாவளவனை திமுக உறுப்பினர் என்று குறிப்பிட்டது சன் நியூஸ்
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

அண்மையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை ‘திமுககாரர் போல் பேசுகிறீர்கள்’ என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கூற, அது பெரும் சர்ச்சையானது.

இந்நிலையில் “அண்ணே திருமாவளவன் நீங்க திமுக உறுப்பினர் இல்லை தானே அப்பறம் ஏன் இந்த சன் நியூஸ் காரன் இப்படி சொல்லி இருக்கான்” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அந்த நியூஸ்கார்டில் திமுக உறுப்பினர் திருமாவளவன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

திருமாவளவனை திமுக உறுப்பினர் என்று குறிப்பிட்டு சன் நியூஸ் செய்தி வெளியிட்டதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Twitter @shareauto1979
திருமாவளவனை திமுக உறுப்பினர் என்று குறிப்பிட்டு சன் நியூஸ் செய்தி வெளியிட்டதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook / பண்டார வன்னியன்

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: விழுப்புரம் மாவட்டத்தில் 8 ஊராட்சி தலைவர்கள் அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டனரா?

Fact Check/Verification

திருமாவளவனை திமுக உறுப்பினர் என்று குறிப்பிட்டு சன் நியூஸ் செய்தி வெளியிட்டதாக வைரலாகும் நியூஸ்கார்டில், ‘திமுக உறுப்பினர்’ எனும் வாசகம் மட்டும் வேறு எழுத்துருவில் (Font) இருப்பதை நம்மால் காண முடிந்தது. இதனடிப்படையில் காண்கையில் இது போலியான நியூஸ்கார்ட் என்பதை நம்மால் உணர முடிந்தது.

இருப்பினும் இந்த நியூஸ்கார்டை பலர் உண்மை என்று நம்பி பரப்பி வருவதால் இதை முறையாக ஆய்வு செய்து நிரூபிக்க விரும்பினோம். முன்னதாக சன் நியூஸ் இவ்வாறு  ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில்,  தமிழகத்தில் அதிமுகவின் தலைவராக மோடியும், செயலாளராக அமித்ஷாவும் உள்ளனர் -விசிக தலைவர் திருமாவளவன் கடும் விமர்சனம்!’ என்று தலைப்பிட்டு சன் நியூஸ் பிப்ரவரி 28, 2021 அன்று நியூஸ்கார்ட் ஒன்றை வெளியிட்டிருந்தை காண முடிந்தது.

அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்த நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனையடுத்து சன் நியூஸின் டிஜிட்டல் தலைவர் மனோஜை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட குறித்து விசாரித்ததில், அவரும் அந்த நியூஸ்கார்ட் போலியானது என்பதை உறுதி செய்தார்.

Also Read: Fact Check: பாகிஸ்தானில் இறந்த மகள்கள் சமாதிக்கு பூட்டு போடும் பெற்றோர் எனப் பரவும் புகைப்படம் உண்மையா?

Conclusion

திருமாவளவனை திமுக உறுப்பினர் என்று குறிப்பிட்டு சன் நியூஸ் செய்தி செய்தி வெளியிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Facebook post, from Sun News, Dated February 28, 2021
Phone Coversation with Manoj, Digital Head, Sun News, Dated May 03, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular