Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
தமிழகப் பள்ளிக்கூடப் பாடநூல் ஒன்று, ஓரினச்சேர்க்கைப் பெற்றோரையும் எடுத்துக் காட்டும் வகையில் இரண்டு அப்பாக்கள்+குழந்தை, இரண்டு அம்மாக்கள்+குழந்தை என்கிற பாடத்திட்டம் இடம்பெற்றுள்ளதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
எல்.ஜி.பி.டி கம்யூனிட்டி என்று அழைக்கப்படும் ஒரே பாலினத்தவர்களுக்கு இடையே ஏற்படும் ஈர்ப்பு, ஓரினச்சேர்க்கை எனப்படுகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு, இதுகுறித்த வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம், சட்டபூர்வ வயதை அடைந்த ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களின் ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என்று சட்டப்பிரிவு 377 குறித்து தீர்ப்பளித்தது.
எனினும், அந்தரங்க உரிமையானது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்று அந்தத் தீர்ப்பு கூறினாலும் கூட, இன்றும் பழமையில் ஊறிப்போன பல்வேறு கலாச்சார ஒப்பிடுகைகளில் ஓரினச்சேர்க்கையையும் குற்றமாகப் பார்க்கிறவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
இந்நிலையில், தமிழகப் பள்ளிக்கூடப் பாடநூல் ஒன்றில் ஓரினச்சேர்க்கையாளர்களானப் பெற்றோர் குறித்த பாடதிட்டமும் குடும்ப உறவுகள் என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டிருப்பதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இச்செய்திக் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
ஓரினச்சேர்க்கைப் பெற்றோர் குறித்த பாடத்திட்டம் இணைக்கப்பட்டுள்ளதாகப் பரவும் தமிழகப் பள்ளிக்கூடப் பாடநூல் குறித்த உண்மைத்தன்மை அறிய ஆய்வில் இறங்கினோம்.
குறிப்பிட்ட அந்த புத்தகப் பக்கத்தில், ஆங்கிலத்தில் ‘What is family?’ என்கிற தலைப்பில் ஓரினச்சேர்க்கையாளர்களான பெற்றோரும் இடம் பெற்றுள்ளனர். நம்முடைய ஆய்வில், கடந்த சில வருடங்களாகவே கேரள பாடநூல், தமிழகப் பாடநூல் என்றெல்லாம் இந்த புகைப்படம் வைரலாகி வருவது தெரிய வந்தது.
உண்மையிலேயே, இது போன்ற பாடத்திட்டம் தமிழகப் பள்ளிக்கூடப் பாடநூலில் இடம்பெற்றுள்ளதா என்று தேடியபோது அதுபோன்ற பாடம் எதையும் நம்மால் கண்டறிய முடியவில்லை.
எனவே, புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆராய்ந்தபோது எகிப்து செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டிருந்த செய்தி ஒன்று நமக்குக் கிடைத்தது.
அதில், எகிப்திய பள்ளி ஒன்றில் பாடநூலில் ஓரினச்சேர்க்கை பெற்றோர் குறித்த இந்த பாடத்திட்டம் இடம்பெற்றுள்ளதாகவும், அதுகுறித்த விசாரணையில் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, தமிழகப் பள்ளிகூடப் பாடநூல் ஒன்றில் ஓரினச்சேர்க்கைப் பெற்றோர் குறித்த பாடத்திட்டம் இடம்பெற்றிருப்பதாகப் பரவும் இப்புகைப்படச் செய்தி தவறானதாகும்; சில வருடங்களுக்கு முன்பே வைரலான தவறான செய்தி என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
Egypt Independent: https://egyptindependent.com/education-ministry-initiates-urgent-investigation-into-textbook-cartoon-which-supports-homosexuality/
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
December 23, 2024
Vijayalakshmi Balasubramaniyan
November 6, 2024
Vijayalakshmi Balasubramaniyan
September 10, 2024