Fact Check
கோயில்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்ஃப் நிலங்கள் மீட்கப்படும் என்று SDPI தலைவர் நெல்லை முபாரக் கூறினாரா?
Claim
கோயில்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்ஃப் நிலங்கள் மீட்கப்படும் என்று SDPI தலைவர் நெல்லை முபாரக் கூறினார்.
Fact
வைரலாகும் நியூஸ்கார்டு போலியானதாகும். நியூஸ் 18 தரப்பு இதை உறுதி செய்துள்ளது.
இந்து அறநிலையத் துறை, மடங்கள், மற்றும் கோயில்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்ஃ போர்டு நிலங்கள் மீட்கப்படும் என்று SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் சுலோச்சனா காலமானார் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check/Verification
கோயில்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்ஃப் நிலங்கள் மீட்கப்படும் என்று SDPI தலைவர் நெல்லை முபாரக் கூறியதாக பரப்பப்படும் நியூஸ்கார்டில் அறநிலையத்துறை, வக்ஃப், மீட்கப்படும் உள்ளிட்ட வார்த்தைகள் எழுத்துப்பிழையுடன் இருப்பதை காண முடிந்தது.

இதை வைத்து பார்க்கையிலேயே இந்த நியூஸ்கார்டு போலியானது என அறிய முடிந்தது. இருப்பினும் இதை முறையாக ஆராய்ந்து முடிவெடுக்க எண்ணி, இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
முன்னதாக வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ள பிப்ரவரி 12 அன்று நெல்லை முபாரக் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினாரா என்று தேடினோம். அதில் இத்தினத்தில் எந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பையும் அவர் நிகழ்த்தவில்லை என அறிய முடிந்தது.
இதனைத் தொடர்ந்து தேடுகையில் கடந்த திங்கட்கிழமை (பிப்ரவரி 09) அன்று கடைசியாக மதுரை தெற்கு SDPI அலுவலகத்தில் நெல்லை முபாரக் பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளதை அறிய முடிந்தது. அந்த சந்திப்பிலும் வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிடுள்ள கருத்துகளை அவர் பேசி இருக்கவில்லை.
இதனையடுத்து இத்தகவல் நியூஸ்18 தமிழ்நாடு நியூஸ்கார்டு டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டதா என தேடினோம். இத்தேடலில் அந்நிறுவனம் வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டிருக்கவில்லை.
இதனையடுத்து நியூஸ் 18 தமிழ்நாடின் டிஜிட்டல் பொறுப்பாளரை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து விசாரித்தோம். அவர் வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்று உறுதி செய்தார்.
Also Read: உ.பி.யில் குழந்தைப்பேறு பெறுவதற்காக பெண் ஒருவரை கை, கால்களை கட்டிபோட்டு சாக்கடையில் படுக்க வைத்ததாக பரவும் வீடியோத்தகவல் உண்மையானதா?
Conclusion
கோயில்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்ஃப் நிலங்கள் மீட்கப்படும் என்று SDPI தலைவர் நெல்லை முபாரக் கூறியதாக பரவும் நியூஸ்கார்டு போலியானதாகும். நியூஸ் 18 தமிழ்நாடு தரப்பும் இதை உறுதி செய்துள்ளது.
இந்த உண்மையானது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Youtube Video from, Thanthi TV, Dated February 09, 2025
Comment from News 18 Tamilnadu