ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkடெல்லி நிர்வாக மசோதாவை அமித் ஷாவுக்காக ஏற்கின்றோம் என்று தம்பிதுரை கூறினாரா?

டெல்லி நிர்வாக மசோதாவை அமித் ஷாவுக்காக ஏற்கின்றோம் என்று தம்பிதுரை கூறினாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: அமித் ஷாவுக்காக டெல்லி நிர்வாக மசோதாவை ஏற்கின்றோம் – அதிமுக எம்.பி. தம்பிதுரை

Fact: அமித் ஷா கொண்டு வந்த மசோதாவை ஆதரிக்கின்றோம் என்று தம்பிதுரை கூறினாரே தவிர, அமித் ஷாவுக்காக மசோதாவை ஏற்கின்றோம் என்று அவர் கூறவில்லை.

அமித் ஷாவுக்காக டெல்லி அரசின் அதிகார பறிப்பு மசோதாவை ஆதரிக்கிறோம் என்று அதிமுக எம்.பி. தம்பிதுரை மாநிலங்களவையில் பேசியதாக நியூஸ்கார்ட் ஒன்றை கலைஞர் செய்திகள் வெளியிட்டுள்ளது

அமித் ஷாவுக்காக டெல்லி நிர்வாக மசோதாவை ஏற்கின்றோம் என்று அதிமுக எம்.பி. தம்பிதுரை கூறியதாக கலைஞர் செய்திகள் வெளியிட்ட செய்தி
Screenshot from Twitter@Kalaignarnews

Twitter Link | Archived Link

இதனைத் தொடர்ந்து பலரும் இந்த நியூஸ்கார்டை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

அமித் ஷாவுக்காக டெல்லி நிர்வாக மசோதாவை ஏற்கின்றோம் என்று அதிமுக எம்.பி. தம்பிதுரை கூறியதாக கலைஞர் செய்திகள் வெளியிட்ட செய்தி
Screenshot from Facebook/Vpm Saravan

Archived Link

அமித் ஷாவுக்காக டெல்லி நிர்வாக மசோதாவை ஏற்கின்றோம் என்று அதிமுக எம்.பி. தம்பிதுரை கூறியதாக கலைஞர் செய்திகள் வெளியிட்ட செய்தி
Screenshot from Facebook/Manikandan Ayyappan

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தகைசால் தமிழர் விருது வேண்டாம் என்று கூறினாரா கி.வீரமணி?

Fact Check/Verification

டெல்லி நிர்வாக மசோதாவை அமித் ஷாவுக்காக ஏற்கின்றோம் என்று அதிமுக எம்.பி. தம்பிதுரை கூறியதாக கலைஞர் செய்திகள் நியூஸ்கார்ட் வெளியிட்டதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

இந்த ஆய்வில் வைரலாகும் இத்தகவல் தவறானது என அறிய முடிந்தது.  இந்திய அரசின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நிகழ்வை ஒளிப்பரப்பும் சன்சத் டிவி யூடியூப் பக்கத்தில் தம்பிதுரை டெல்லி நிர்வாக மாற்ற மசோதாவிற்கு ஆதரவு அளித்து பேசி இருப்பதை காண முடிந்தது.

அதில், அமித் ஷா கொண்டு வந்துள்ள இந்த மசோதா மிகவும் முக்கியமானது. இதற்கு நாங்கள் ஆதரவளிக்க விரும்புகின்றோம். அமித் ஷா கொண்டு வந்த சட்டத்திருத்திற்கு அ.தி.மு.க சார்பில் முழு ஆதரவை வழங்குகிறேன். அரசியலமைப்புச் சட்டம் யூனியன் பிரதேசங்கள் குடியரசுத் தலைவரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. மசோதாவை எதிர்க்கும் ப.சிதம்பரம் இந்த பக்கத்தில் இருந்தால் மசோதாவை ஆதரித்து வலுவான கருத்துக்களை வைக்கக் கூடிய வல்லமை உடையவர். கூட்டாட்சியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை விட மத்திய அரசுக்கே அதிக அதிகாரம். காங்கிரஸ் அரசு தான் கூட்டாட்சிக்கு எதிராக செயல்பட்டது. மாநில உரிமைகளை பறித்தது காங்கிரஸ் அரசு தான். எமர்ஜென்சியை நாடு மறக்காது. அதேபோல் திமுக, அதிமுக கட்சிகள் எதிர்த்தபோதும் ஜிஎஸ்டியை கொண்டு வந்ததும் காங்கிரஸை சேர்ந்த சிதம்பரம்தான் என்று தம்பிதுரை பேசியிருப்பதை காண முடிந்தது.

டெல்லி நிர்வாக மாற்ற மசோதாவிற்கு ஆதரவு  அளித்தும், காங்கிரஸை விமர்சித்தும் பல்வேறு கருத்துகளை தம்பிதுரை பேசியிருப்பதை நம்மால் காண முடிகின்றது. இதன் அடிப்படையில் காண்கையில் அமித் ஷா கொண்டு வந்த ஒரே காரணத்துக்காக டெல்லி நிர்வாக மசோதாவை தம்பிதுரை ஏற்றதுபோல் கலைஞர் செய்திகள் வெளியிட்டுள்ள செய்தி தவறானது என்பதை நம்மால் உணர முடிகின்றது.

தம்பிதுரை அமித் ஷா கொண்டு வந்த மசோதாவை ஆதரிக்கின்றோம் என்று கூறியுள்ளாரே தவிர, அமித்ஷாவுக்காக மசோதாவை ஏற்கின்றோம் என்று கூறவில்லை.

Also Read: ஹரியானா வன்முறையுடன் தொடர்புடையதாக பரவும் 2019ஆம் ஆண்டு சூரத் கலவர வீடியோ!

Conclusion

அமித் ஷாவுக்காக டெல்லி நிர்வாக மசோதாவை ஏற்கின்றோம் என்று அதிமுக எம்.பி. தம்பிதுரை கூறியதாக கலைஞர் செய்திகள் வெளியிட்ட செய்தி தவறானது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Youtube Video from Sansad TV, Dated August 07, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular