ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 8, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 8, 2024

HomeFact Checkதகைசால் தமிழர் விருது வேண்டாம் என்று கூறினாரா கி.வீரமணி?

தகைசால் தமிழர் விருது வேண்டாம் என்று கூறினாரா கி.வீரமணி?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: தகைசால் தமிழர் விருது வேண்டாம் – கி.வீரமணி

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

தகைசால் தமிழர் விருது வேண்டாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“தகைசால் தமிழர் விருது வேண்டாம்! தமிழர் என்ற சொல் எங்களுக்கு ஒவ்வாமையான சொல், திராவிடர் என்பதே எங்களின் ஒரே பெருமைமிகு அடையாளம். தகைசால் தமிழர் விருது எனக்கு வேண்டாம்; தகைசால் திராவிடர் விருது எனக்கு வழங்கப்பட வேண்டும் – கி.வீரமணி” என்று அந்த நியூஸ்கார்ட் வைரலாகிறது.

Screenshot from facebook/Niraniyan

Facebook Link

Screenshot from Facebook/jrrajamani.kingbell.7

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: உத்தரகாண்ட் குறித்து மதவாத பிரச்சாரம் செய்த இந்து சாமியார் விபச்சார அழகிகளுடன் பிடிபட்டாரா?

Fact Check/Verification

தகைசால் தமிழர் விருது வேண்டாம்; தகைசால் திராவிடர் விருது வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் நியூஸ்கார்ட் நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதாகப் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் ஆராய்ந்தோம்.

அப்போது, ”’தகைசால் தமிழர்’ விருதுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தேர்வு – முதலமைச்சருக்கு நன்றி” என்கிற நியூஸ்கார்டே அவர்களுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியாகியிருந்தது.

மேலும், தகைசால் தமிழர் விருது வேண்டாம் என்று கி.வீரமணி கூறியதாகப் பரவிய நியூஸ்கார்டினை நியூஸ் 7 தமிழ் வெளியிடவில்லை என்று, “இந்த செய்தியை நியூஸ்7 தமிழ் வெளியிடவில்லை” என அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Also Read: அண்ணாமலை பாதயாத்திரை வாகனத்தில் இரட்டைப் படுக்கை எதற்கு என்று கேள்வி எழுப்பினாரா சீமான்?

Conclusion

தகைசால் தமிழர் விருது வேண்டாம்; தகைசால் திராவிடர் விருது வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Twitter Post from News 7 Tamil, Dated August 05, 2023

Twitter Post from News 7 Tamil, Dated August 01, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular