வியாழக்கிழமை, ஜூன் 13, 2024
வியாழக்கிழமை, ஜூன் 13, 2024

HomeFact CheckNewsராகுல் காந்தியுடன் இருப்பது புலம்பெயர் தொழிலாளர்கள் இல்லையா? உண்மை என்ன

ராகுல் காந்தியுடன் இருப்பது புலம்பெயர் தொழிலாளர்கள் இல்லையா? உண்மை என்ன

உரிமை கோரல்

இங்கு முதலில் உள்ளப் புகைப்படத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் என்றப் பெயரில் சிலரைக் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தது. இரண்டாவதாக உள்ளப் புகைப்படம்:- முதல் புகைப்படத்தில் வெளிமாநிலப் பெண் என்ற பெயரில் நடித்து ஷூட்டிங் முடிந்தவுடன் தனது காரில் புறப்பட்டுச் சென்றப் புகைப்படம்.

சரிபார்ப்பு

ராகுல் காந்தி புலம்பெயர் தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசும் புகைப்படங்கள் தற்போது இந்திய அளவில் வைரலாகி வருகிறது.ராகுல் காந்தி அவர்கள் போலியான நபர்களை வைத்துப் புலம்பெயர்த் தொழிலாளர்கள் என விளம்பரம் தேடிக் கொள்வதாகப் பரப்பி வருகிறார்கள். இப்படி இந்திய அளவில் வைரல் செய்யப்படும் புகைப்படத்தின் உண்மைத்தன்மையை நியூஸ்செக்கரில் அரியத் தொடங்கினோம்.

உண்மை தன்மை

ராகுல் காந்தியின் வைரல் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் செய்கையில், டெல்லியில் உள்ள சுக்தேவ் விஹார் பிளைஓவர் அருகே இருந்த புலம்பெயர்த் தொழிலாளர்களிடம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதாக மே 17-ம் தேதி எகனாமிக் டைம்ஸில் செய்தி வெளியாகி இருக்கிறது.

https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/rahul-gandhi-interacts-with-home-bound-migrant-workers-amid-lockdown/articleshow/75779924.cms

தங்களின் மாநிலங்களுக்குச் செல்வதற்காக சுகதேவ் விஹார் பிளைஓவர் அருகே நடந்துச் சென்றப் புலம்பெயர்த் தொழிலாளர்களிடம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாடினார். பின்னர் அம்மக்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் வாகனங்கள் ஏற்பாடு செய்து தந்தனர் .

சாலையோரம் இருந்த 25 புலம்பெயர்ந்தத் தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அனுப்ப ராகுல் காந்தி ஏற்பாடு செய்ததாக மே 16-ம் தேதி எஎன்ஐ செய்தி வீடியோ வெளியிட்டு உள்ளது .அதில், வைரலானப்  புகைப்படத்தில் இருப்பவர்கள் செல்லும் காட்சிகளைக் காணலாம் .

முடிவுரை

எங்களின் ஆராய்ச்சிக்குப் பின்னர் ராகுல் காந்தி புலம்பெயர்த் தொழிலாளர்களைச் சந்திக்காமல் போலியான ஆட்களை வைத்து விளம்பரம் தேடுவதாகப் பரப்பப்படும் தகவல் தவறானது. பரப்பப்படும் புகைப்படங்களில் இருப்பது புலம்பெயர்த் தொழிலாளர்களே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவர்களைச் சொந்த ஊர்களுக்கு காரில் அனுப்பும் முயற்சியைத் தவறாகச் சித்தரித்துச் சிலர் பரப்பி வருகிறார்கள் என அறிய முடிந்தது.

Sources

  • Google Search
  • Twitter 
  • Reverse image search 

Result: False

(உங்களுக்கு எந்தவொரு தகவலின் உண்மைத்தன்மையைத் தெரியவேண்டுமானால் எங்களிடம் 9999499044 என்ற வாட்ஸாப் எண்ணில் புகார் அளிக்கலாம். எங்கள் இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular