ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkவெள்ள பாதிப்புகளை சரி செய்ய  பொதுமக்களிடம் நிதி கேட்டாரா முதலமைச்சர் ஸ்டாலின்?

வெள்ள பாதிப்புகளை சரி செய்ய  பொதுமக்களிடம் நிதி கேட்டாரா முதலமைச்சர் ஸ்டாலின்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: வெள்ள பாதிப்புகளை சரி செய்ய பொதுமக்களிடம் நிதி கேட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Fact: வைரலாகும் நியூஸ்கார்டு 2021 ஆம் ஆண்டின் பழைய நியூஸ்கார்டாகும்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் வந்த வெள்ள பாதிப்புகளை சரி செய்ய பொதுமக்களிடம் நிதி கேட்டதாக கூறி நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மு.க.ஸ்டாலின் வெள்ள பாதிப்புகளை சரி செய்ய  பொதுமக்களிடம் நிதி கேட்டதாக பரவும்  நியூஸ்கார்டு

Twitter Link | Archived Link

மு.க.ஸ்டாலின் வெள்ள பாதிப்புகளை சரி செய்ய  பொதுமக்களிடம் நிதி கேட்டதாக பரவும்  நியூஸ்கார்டு

Archived Link

மு.க.ஸ்டாலின் வெள்ள பாதிப்புகளை சரி செய்ய  பொதுமக்களிடம் நிதி கேட்டதாக பரவும்  நியூஸ்கார்டு

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ‘ஓம் நமசிவாய’ என்று கூற அனுமதி மறுக்கப்பட்டதா?

Fact Check/Verification

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ள பாதிப்புகளை சரி செய்ய பொதுமக்களிடம் நிதி கேட்டதாக வைரலாகும் நியூஸ்கார்டை உற்று கவனிக்கையில், அக்கார்டில் ‘13 மே 2021’ என்ற தேதி இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

மு.க.ஸ்டாலின் வெள்ள பாதிப்புகளை சரி செய்ய  பொதுமக்களிடம் நிதி கேட்டதாக பரவும்  நியூஸ்கார்டு

இது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து, வைரலாகும் நியூஸ்கார்டானது பாலிமர் நியூஸின் நியூஸ்கார்டு டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் பாலிமர் நியூஸின் சமூக ஊடகப் பக்கங்களில் இந்த நியூஸ்கார்டு குறித்து தேடினோம்.

இத்தேடலில் ‘13 மே 2021’ அன்று வைரலாகும் இதே நியூஸ்கார்டை பாலிமர் நியூஸ் அதன் சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடியதில் கொரானா தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் நிதி தரவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்று வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. இவ்வீடியோவானது ‘13 மே 2021’ என்று அவரது அதிகாரப்பூர்வ முகநூல் பகிரப்பட்டிருந்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் நியூஸ்கார்டானது 2021 ஆம் ஆண்டில் வெளிவந்த பழைய நியூஸ்கார்டு என தெளிவாகின்றது.

Also Read: கோவா விமான நிலையத்தில் இந்தி தெரியாது என்று கூறிய ஷர்மிளாவின் இந்தி பதிவு என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Conclusion

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் வந்த வெள்ள பாதிப்புகளை சரி செய்ய  பொதுமக்களிடம் நிதி கேட்டதாக பரவும்  நியூஸ்கார்டானது 2 ஆண்டுகளுக்கு முன்பு 2021 ஆம் ஆண்டில், கொரானா சமயத்தில் வெளிவந்த பழைய நியூஸ்கார்டாகும்.

இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Tweet from Polimer News, Dated May 13, 2021
Live video from M.K.Stalin, Chief Minister, Tamilnadu, Dated May 13, 2021

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular