தமிழக பாஜகவின் மாநில இளைஞரணித் தலைவர் வினோஜ் பி.செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் கொடைக்கானல் பயணத்தை கேலி செய்து, ஸ்டாலின் அவர் மனைவியுடன் படகு பயணம் செய்ததாகக் கூறி, புகைப்படம் ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Archive Link: https://archive.ph/EUG77
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது குடும்பத்தினருடன் மூன்று நாட்கள் பயணமாக கொடைக்கானல் சென்றுள்ளார்.
கொரானாப் பரவல் மிகக் கடுமையாக இருக்கும் இத்தருணத்தில் ஸ்டாலின் அவர்களின் கொடைக்கானல் பயணம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலர் இப்பயணத்தை விமர்சித்து வருகின்றனர்.
பாஜகவைச் சேர்ந்த வினோஜ்.பி.செல்வம் “ரோம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். இதைப் பார்க்கும்போது அந்த நிகழ்வு ஞாபகம் வருது..” என்ற தலைப்பிட்டு, மு.க.ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஸ்டாலினுடன் படகு பயணம் செல்லும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் இதே புகைப்படத்தை பகிர்ந்து, பலரும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Archive Link: https://archive.ph/Zgur6

Archive Link: https://archive.ph/gfNHy
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய அப்புகைப்படம் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
ஸ்டாலின் அவர்கள் தனது மனைவியுடன் படகு பயணம் சென்றதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, அப்புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம்.
இவ்வாறு ஆய்வு செய்ததில் இப்புகைப்படம் 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதென்ற உண்மை நமக்கு தெரிய வந்தது.
கடந்த 2019 ஆம் ஆண்டு அரவக்குறிச்சி உட்பட 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைப்பெற்றது. இத்தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து அரவக்குறிச்சி தொகுதியில் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். இதன்பின் ஓய்வெடுக்க கொடைக்கானலுக்கு தன் மனைவியுடன் சென்றார். அப்போது எடுக்கப்பட்டப் படமே தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இதுக்குறித்த செய்தியை இங்கே, இங்கே மற்றும் இங்கே படிக்கலாம்.


மேற்கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, ஸ்டாலின் அவர்கள் படகு சவாரி செய்யும் புகைப்படம் பழையப் புகைப்படம் என்பது தெளிவாகின்றது.
Conclusion
கொடைக்கானல் பயணத்தில் ஸ்டாலின் அவர்கள் படு சவாரி செய்ததாக கூறி பகிரப்படும் புகைப்படம், 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழையப் படம் என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources
Samayam Tamil: https://tamil.samayam.com/latest-news/state-news/mk-stalin-boat-rides-with-his-wife-durga-at-kodaikanal/articleshow/69268068.cms
Dinamalar: https://www.dinamalar.com/news_detail.asp?id=2273163
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)