ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkமு.க. ஸ்டாலின் உடன் புகைப்படத்தில் இருப்பது சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தாரா...

மு.க. ஸ்டாலின் உடன் புகைப்படத்தில் இருப்பது சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தாரா ?

உரிமை கோரல் :

படம் பார்த்த கதையை கூறு…

இந்த படத்தில் உள்ளவர்கள் யார் யார்…???

அர்பன் நக்சல்கள்… என்று ஒரே வரியில் கூறிவிட்டு தப்பித்துக்கொள்ள கூடாது…

அது கள்ளாட்டம்…

சாத்தான்குளத்தில் வணிகக்கடையை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கப்பட்டதில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கண்டனத்தைப் பெற்று வருகிறது. சாத்தான்குளம் தந்தை மற்றும் மகன் இறப்பு உடன் அரசியல் சார்ந்தும் தவறான கருத்துக்களை பகிர்ந்து வருவதை பார்க்க முடிகிறது.அதன் உண்மைத் தன்மையை நியூஸ்செக்கரில் அரியத் தொடங்கினோம் .

உண்மைத் தன்மை :

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பம் ஸ்டாலினை சந்தித்து உள்ளதாக பரவிய வைரல் புகைப்படத்தைப் ரிவேர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2018-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி tnvsp.blogspot.com எனும் வலைப்பதிவு தளத்தில் ” வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மகள் திருமணம்: கருணாநிதி, வைகோ, ஜி.கே.வாசன் வாழ்த்து ” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பில் இப்புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது.

https://tnvsp.blogspot.com/2018/10/blog-post_14.html

மு .க.ஸ்டாலின் மற்றும் அவரின் மனைவி உடன் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா குடும்பத்தினர் இருக்கும் பல புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

https://tnvsp.blogspot.com/2018/10/amvikramraja-daughter-marriage.html

படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள நபரைத்தான் ஃபென்னிக்ஸ் என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் அப்படத்தை நன்கு உற்று நோக்கும்போது அது ஃபென்னிக்ஸ் இல்லை என்பது தெளிவாகிறது.

முடிவுரை :

எங்களின் ஆராய்ச்சிக்குப் பின்னர் மு.க. ஸ்டாலின் உடன் புகைப்படத்தில் இருப்பவர்கள் சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பம் இல்லை பொய்யான தகவல் என்பது  தெரியவந்து உள்ளது.அது வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மகள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட குடும்பத்தினரின் புகைப்படம் என அறிய முடிகிறது.

Sources

  • Google Search
  • Facebook
  • You Tube
  • Twitter
  • Blogs 

Result: False  

(உங்களுக்கு எந்தவொரு தகவலின் உண்மைத்தன்மையைத் தெரியவேண்டுமானால் எங்களிடம் 9999499044 என்ற வாட்ஸாப் எண்ணில் புகார் அளிக்கலாம். எங்கள் இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Most Popular