வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

HomeFact Checkஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.40-ஐ வரியாக விதிக்கின்றதா தமிழக அரசு?

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.40-ஐ வரியாக விதிக்கின்றதா தமிழக அரசு?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.40-ஐ தமிழக அரசு வரியாக வசூலிப்பதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.40-ஐ தமிழக அரசு வரியாக வசூலிப்பதாக பரவும் தகவல்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயிக்கிறது. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசு தமிழக அரசுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.59.94-க்கு தருவதாகவும், தமிழக அரசு ஏறக்குறைய 40 ரூபாயை மாநில வரியாக விதித்து ரூ.100க்கு ஒரு லிட்டர் பெட்ரோலை விற்பனை செய்து வருவதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.40-ஐ தமிழக அரசு வரியாக வசூலிப்பதாக பரவும் தகவல் - 1

Archive

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.40-ஐ தமிழக அரசு வரியாக வசூலிப்பதாக பரவும் தகவல் - 2

Archive

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.40-ஐ தமிழக அரசு வரியாக வசூலிப்பதாக பரவும் தகவல் -

Archive

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஓங்கோல் தெலுங்கரான ஸ்டாலின் தமிழ்நாடு முதல்வராகும்போது தமிழ்நாடு திரைப்பட சங்க தலைவராக நான் ஆகக் கூடாதா என கேள்வி எழுப்பினாரா பிரகாஷ்ராஜ்?

Fact Check/Verification

தமிழக அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.40-ஐ வரியாக வசூலிக்கின்றது எனும் தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்ய தொடங்கினோம்.

பெட்ரோல் விலையானது அடிப்படை விலை, மத்திய அரசு வரி, மாநில அரசு வரி, விநியோகிஸ்தர் கமிஷன் ஆகியவற்றை ஒன்று கூட்டியே ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்படுகின்றது.

இதில் அடிப்படை விலை, மாநில அரசு வரி, விநியோகிஸ்தர் கமிஷன் ஆகிய மூன்றும் நாடு முழுவதும் ஒரே அளவிலேயே இருக்கும். மாநில வரி மட்டும் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஏற்ப மாறுபடும். தமிழகத்தைப் பொறுத்த வரை 15 சதவீதம் VAT வரியுடன் லிட்டருக்கு ரூ. 13.02 சேர்த்து வசூலிக்கப்படுகின்றது.  

மாநில அரசு வரி குறித்த தகவல்.
Source: Ministry of Petroleum

டெல்லியில் நேற்றைய பெட்ரோலின் விலை ரூ.98.81 ஆகும். இந்த விலை எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டது என்பது குறித்த தகவல் இந்தியன் ஆயிலின் அதிகாரப் பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை நிர்ணயம் குறித்த தகவல்.
Source: Indian Oil

இதன் அடிப்படையில் பார்க்கும்போது நேற்றைய பெட்ரோலின் அடிப்படை விலை ரூ 39.29, மத்திய அரசின் வரி ரூ.32.90, விநியோகிஸ்தர் கமிஷன் ரூ.3.82 என தெளிவாகின்றது.

இந்த மதிப்பை அனைத்தையும் ஒன்று கூட்டி, நேற்றைய சென்னை பெட்ரோல் விலையான ரூ.99.80லிருந்து கழித்தால் தமிழகத்தில் பெட்ரோலுக்கு எவ்வளவு மாநில வரி வசூலிக்கப்படுகின்றது என்பதை அறிய முடியும்.

99.80 – (39.29+32.90+3.82) = 23.79

ஆக தமிழகத்தின் மாநில வரி ரூ.23.79 ஆகும். (இது மத்திய அரசின் வரியைக் காட்டிலும் குறைவாகும்.)

இதனடிப்படையில் பார்க்கும்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 40 ரூபாயை தமிழக அரசு வரியாக விதிக்கின்றது என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறான ஒன்று என்பது நிரூபணமாகின்றது.

Also Read: தெலுங்கரான விஷால் தமிழ் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெறும்போது நான் கூடாதா என்றாரா பிரகாஷ் ராஜ்?

Conclusion

தமிழக அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.40-ஐ வரியாக விதிக்கின்றது என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Ministry Of Petroleum: https://www.ppac.gov.in/content/149_1_pricespetroleum.aspx

Indian Oil: https://iocl.com/petrol-diesel-price


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular