ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkஇஸ்லாமியர் அணியக்கூடிய தொப்பியுடன் பிரதமர் மோடி இருப்பதாக பரவும் எடிட் படம்!

இஸ்லாமியர் அணியக்கூடிய தொப்பியுடன் பிரதமர் மோடி இருப்பதாக பரவும் எடிட் படம்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: இஸ்லாமியர் அணியக்கூடிய தொப்பியுடன் பிரதமர் மோடி

Fact: வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

“எகிப்தில் மகா நடிகன்” என்று குறிப்பிட்டு பிரதமர் மோடி இஸ்லாமியர் அணியக்கூடிய தொப்பியுடன் இஸ்லாமியர்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இஸ்லாமியர் அணியக்கூடிய தொப்பியுடன் பிரதமர் மோடி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படம்
Screenshot from Twitter@thechanakkiyan

Twitter Link | Archived Link

இஸ்லாமியர் அணியக்கூடிய தொப்பியுடன் பிரதமர் மோடி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படம்
Screenshot from Facebook/chanbashaa1

Archive Link

இஸ்லாமியர் அணியக்கூடிய தொப்பியுடன் பிரதமர் மோடி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படம்
Screenshot from Facebook/Slem Sleeper

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: டெல்லி ஜெகன்நாதர் ஆலய கருவறை உட்பிரகாரத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு நுழைய அனுமதிக்கப்படவில்லையா?

Fact Check/Verification

இஸ்லாமியர் அணியக்கூடிய தொப்பியுடன் பிரதமர் மோடி இருப்பதாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து அப்படம் குறித்து அறிய அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆராய்தோம். இதில் “PM hails Dawoodi Bohra community for contribution to nation-building” என்று தலைப்பிட்டு யுனைட்டெர் நியூஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருந்த செய்தியில் இதே படமானது பயன்படுத்தப்பட்டிருப்பதை காண முடிந்தது. ஆனால் அப்படத்தில் பிரதமர் தொப்பி அணிந்திருக்கவில்லை.

இஸ்லாமியர் அணியக்கூடிய தொப்பியுடன் பிரதமர் மோடி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படம்
Screengrab from United News of India

பிரதமர் மோடி மும்பையில் இருக்கும் தாவூதி போரா சமூகத்தினருக்கு சொந்தமான அல்ஜாமியா-தஸ்-சைஃபியாவின் புதிய வளாகத்தை இந்தாண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படமே எடிட் செய்யப்பட்டு பரப்பப்பட்டு வருகின்றது.

தொடர்ந்து தேடுகையில் பிரதமரின் அதிகார்ப்பூர்வ டிவிட்டர் பக்கத்திலும் இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது. அவற்றுள் பிரதமர் தொப்பி அணியாத உண்மையான படம் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

கிடைத்த ஆதாரங்களின் படி காண்கையில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையானப் படத்தையும் எடிட் செய்த படத்தையும் கீழே ஒப்பிட்டு காட்டியுள்ளோம்.

Also Read: கரூர் மாவட்ட பாஜகவினர் மற்றும் திமுகவினர் ஆடு திருடியதாகப் பரவும் போலி நியூஸ்கார்டுகள்!

Conclusion

இஸ்லாமியர் அணியக்கூடிய தொப்பியுடன் பிரதமர் மோடி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Report from United News of India, Dated February 10, 2023

Press Release from Press Information Bureau
Tweet from PM Modi, Dated February 10, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular