Fact Check
திரிஷாவின் நாய்க்குட்டி பிறந்தநாளில் விஜய் கலந்துக்கொண்டாரா?
Claim
திரிஷாவின் நாய்க்குட்டி பிறந்தநாளில் விஜய் கலந்துக்கொண்டார்.
Fact
வைரலாகும் தகவல் தவறானதாகும். செயற்கை நுண்ணறிவு மூலம் எடிட் செய்யப்பட்ட படத்தை இத்தகவல் பரப்பப்படுகின்றது.
நடிகை திரிஷாவின் நாய்க்குட்டி பிறந்தநாளில் விஜய் கலந்துக்கொண்டதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
அப்படத்தில் இரண்டு காட்சிகள் இடம்பெற்றிருந்தது. முதல் காட்சியில் திரிஷா தனது செல்ல நாய்க்குட்டியுடன் கேக் வெட்டுகையில் வெள்ளை நிற ஷூ ஒன்று அவ்விடத்தில் இருப்பதாக இருந்தது. இரண்டாம் காட்சியில் முதல் காட்சியில் காணப்பட்ட அந்த வெள்ளை நிற ஷூவை விஜய் அணிந்திருப்பதாக இருந்தது.



சமூக ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பீகார் தேர்தல் முடிவுக்குப்பின் பாஜகவை எதிர்த்து மக்கள் திரண்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
Fact Check/Verification
திரிஷாவின் நாய்க்குட்டி பிறந்தநாளில் விஜய் கலந்துக்கொண்டதாக கூறி புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து அதுக்குறித்து ஆராய்ந்தோம்.
அதில் வைரலாகும் படத்தின் இரண்டாம் காட்சியில் விஜய் வெள்ளை நிற ஷூ அணிந்திருப்பதாக பரவும் படம் உண்மையானது என அறிய முடிந்தது.
இவ்வருடம் ஜனவரியில் தவெகவின் மாவட்டச் செயலாளர்களை இரண்டாம் கட்டமாக நியமித்தபோது அப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தவெகவை சார்ந்த எஸ்தர் சுதாகர் என்பவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்படம் ஜனவரி 29, 2025 அன்று பகிரப்பட்டுள்ளது.

இதனையடுத்து திரிஷாவின் நாய்க்குட்டி பிறந்தநாள் கொண்டாட்ட படத்தில் விஜயின் ஷூ இருந்ததாக பரப்பப்படும் காட்சி குறித்து அறிய திரிஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆராய்ந்தோம்.
அதில் திரிஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது நாய்க்குட்டிக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட்டதாக கூறி புகைப்படங்களுடன் பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.
அப்புகைப்படங்களில் ஒன்றாக வைரலாகும் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. ஆனால் அப்படத்தில் வெள்ளை நிற ஷூ இடம்பெற்றிருக்கவில்லை.

இதையடுத்து வைரலாகும் படத்தை கூர்ந்து கவனிக்கையில் அதில் இடம்பெற்றிருந்த திரிஷாவின் முகம் மாறுபட்டு செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றப்பட்டதற்கான சாத்தியக்கூறுகளுடன் இருப்பதை காண முடிந்தது.

இதனைத்தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட படங்களை கண்டறிய உதவும் இணைய கருவிகளான Hive Moderation, Sight Engine உள்ளிட்ட கருவிகள் மூலம் வைரலாகும் படத்தை சோதித்தோம்.
அச்சோதனையில் வைரலாகும் படம் செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றப்பட்டது என உறுதியானது.


கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் திரிஷாவின் நாய்க்குட்டி பிறந்தநாள் படத்தில் விஜய் ஷூ இடம்பெற்றதாக பரப்பப்படும் படம் செயற்கை நுண்ணறிவு மூலம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டது என உறுதியாகின்றது.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும் எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டு காட்டியுள்ளோம்.


Also Read: நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்த தலைமுறை ஹீரோக்களில் முதலிடம் என்பதாக சர்வே வெளியிட்டதா தந்தி டிவி?
Conclusion
திரிஷாவின் நாய்க்குட்டி பிறந்தநாளில் விஜய் கலந்துக்கொண்டதாக கூறி பரப்பப்படும் புகைப்படம் தவறானதாகும். அப்படம் செயற்கை நுண்ணறிவு மூலம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram post by Actress Trisha, dated November 16, 2025
Instagram post by Esther Sudhagar, TVK, dated January 29, 2025
Hive Moderation
Sight Engine
Self Analysis