திரிஷாவின் செல்ஃபி போட்டோவின் பின்புறம் தவெக துண்டு கிடப்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”துண்டு கிடக்கு” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது.



சமூக ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பிரியாணியில் சாக்கடை நீரை கலந்த இஸ்லாமியர்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?
Fact Check/Verification
திரிஷாவின் செல்ஃபி போட்டோவின் பின்புறம் தவெக துண்டு கிடப்பதாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த நவம்பர் 08, 2025 அன்று நடிகை திரிஷா இந்த புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அப்புகைப்படத்தில், அந்த அறையில் தவெக துண்டு இடம்பெற்றிருக்கவில்லை.


எனவே, குறிப்பிட்ட புகைப்படத்தை எடுத்து அதில் தவெக துண்டு இடம்பெற்றிருப்பது போல எடிட் செய்துள்ளனர் என்பது நமக்கு உறுதியாகியது.
Also Read: ‘உங்க விஜய்’ பாடலை ரசிக்கும் இயக்குநர் கெளதம் மேனன் என்று பரவும் வீடியோ உண்மையா?
Conclusion
திரிஷாவின் செல்ஃபி போட்டோவின் பின்புறம் தவெக துண்டு கிடப்பதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram Post By, Trisha Krishnan, Dated November 08, 2025
Self Analysis