ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkஆமை வடிவ கேக்கை வெட்டி பிறந்தநாளை கொண்டாடினாரா சீமான்?

ஆமை வடிவ கேக்கை வெட்டி பிறந்தநாளை கொண்டாடினாரா சீமான்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: சீமான் ஆமை வடிவ கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.

Fact: வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும். கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபாகரனின் பிறந்தநாளை நாதகவினர்  கொண்டாடியபோது எடுக்கப்பட்ட படத்தை எடிட் செய்து இந்த தகவல் பரப்பப்படுகின்றது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இவ்விழாவில் சீமான் ஆமை வடிவ கேக்கை வெட்டி கொண்டாடியதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சீமான் ஆமை வடிவ கேக்கை வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியதாக பரவும் படம்

Twitter Link | Archived Link

சீமான் ஆமை வடிவ கேக்கை வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியதாக பரவும் படம்

Facebook Link

சீமான் ஆமை வடிவ கேக்கை வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியதாக பரவும் படம்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: திமுக அரசு தீபாவளியில் ₹350 கோடிக்கு மது விற்க இலக்கு வைத்துள்ளதா?

Fact Check/Verification

சீமான் ஆமை வடிவ கேக்கை வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியதாக கூறி புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம். அதில் இப்படம் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிந்தது.

நாம் தமிழர் கட்சியினர் நவம்பர் 26, 2019 அன்று விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 65 ஆம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடினர். அச்சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை எடிட் செய்தே மேற்கண்ட புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த உண்மையானப் படங்கள் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே காணலாம்.

வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படங்களையும் எடிட் செய்யப்பட்ட படங்களையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

சீமான் ஆமை வடிவ கேக்கை வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியதாக பரவும் படம்

Also Read: திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் அதிமுக நிர்வாகிகள் கையெழுத்திட மாட்டோம் என்றாரா ஈபிஎஸ்?

Conclusion

சீமான் ஆமை வடிவ கேக்கை வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியதாக பரவும் படம் எடிட் செய்யப்பட்டதாகும். 2019 ஆம் ஆண்டு பிரபாகரனின் பிறந்தநாளை நாதகவினர்  கொண்டாடியபோது எடுக்கப்பட்ட படத்தை எடிட் செய்து இந்த பொய் தகவல் பரப்பப்படுகின்றது.

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Naam Tamilar Katchi Images, (1) and (2)

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular