Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: தவெக காணாமல் போய்விடும் – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக உருவாக்கப்பட்டதாகும்.
தவெக காணாமல் போய்விடும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“நேற்று முளைத்த காளான் தவெக கட்சி, அதிமுக ஆலமரம். அதனால அதிமுகவிற்கு எந்த சேதாரமோ பாதிப்போ கிடையாது. அதிமுக தனிச்சே ஆட்சி அமைக்கும். எங்களோடு சேர்ந்தால் அது அந்தக்கட்சிக்கு நல்லது, இல்லைனா தவெக அடுத்த தேர்தலோட காணாம போயிடும்” அதிமுக ஜெயக்குமார் பதிலடி என்று அந்த நியூஸ்கார்ட் வைரலாகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: 2026 தேர்தல் தொடர்பாக உதயநிதி-அண்ணாமலை ரகசிய சந்திப்பு; வைரலாகும் தகவல் உண்மையானதா?
Fact Check/Verification
தவெக காணாமல் போய்விடும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் புதியதலைமுறை பெயரில் வைரலாகிய நிலையில் அவர்களுடைய பக்கத்தில் ஜெயக்குமார் பெயரில் எந்த செய்தியும் இடம்பெற்றிருக்கவில்லை.
தொடர்ந்து, இதுகுறித்து அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்திலேயே “இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை” என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதியதலைமுறை டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் இவானியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக உருவாக்கப்பட்டது என்று விளக்கமளித்தார்.
Also Read: குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் பாலஸ்தீன கொடியுடன் இருப்பதாகப் பரவும் AI புகைப்படம்!
Conclusion
தவெக காணாமல் போய்விடும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Facebook Post From, Puthiyathalaimurai, Dated November 18, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.