Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
தவெக மதுரை மாநாட்டுக்கு கூடிய கூட்டம்.
வைரலாகும் வீடியோவுக்கும் தவெகவின் மதுரை மாநாட்டுக்கும் தொடர்பில்லை. மகாராஷ்டிராவில் நடந்த ரேக்ளா பந்தயத்தை பார்க்க வந்த கூட்டத்தின் வீடியோவே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தியில் நேற்றைய முன்தினம் நடந்தது. இந்நிலையில் தவெக மதுரை மாநாட்டுக்கு கூடிய கூட்டம் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தலைமை தேர்தல் ஆணையர் பாஜக அமைச்சர்களுடன் தனி விமானத்தில் பயணித்தாரா?
தவெக மதுரை மாநாட்டுக்கு கூடிய கூட்டம் என்று வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.
அதில் வைரலாகும் வீடியோ ஜூன் 23, 2025 அன்று மகாராஷ்டிராவில் நடந்த ரேக்ளா மாட்டுவண்டி பந்தயத்தில் எடுக்கப்பட்டதாக கூறி சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளதை காண முடிந்தது. அப்பதிவுகளை இங்கே மற்றும் இங்கே காணலாம்.


இதனைத் தொடர்ந்து கூகுள் மேப்பின் உதவியுடன் ஆராய்கையில் பெத்கான் கிராமத்தின் ஹிந்த் கேசரி மைதானத்தில் வைரலாகும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என அறிய முடிந்தது.

இதனையடுத்து பெத்காவ்ன் கிராமத்தில் நடந்த ரேக்ளா பந்தயத்தை நடத்திய விழாக்குழுவில் ஒருவரான கார்லோஸ் பஹல்வானை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு பேசினோம்.
அவர் வைரலாகும் வீடியோ பெத்காவ்ன் ஹிந்த் கேசரி மைதானத்தில்தான் எடுக்கப்பட்டது என உறுதி செய்தார். இப்பந்தயம் கடந்த ஜூன் மாதம் 21 ஆம் தேதி நடந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவுக்கும் தவெக மதுரை மாநாட்டுக்கும் தொடர்பில்லை என உறுதியாகின்றது.
வைரலாகும் இதே வீடியோ ராகுல் காந்தியின் பீகார் பேரணி வீடியோ என்று ஏற்கனவே பரவியுள்ளது. அதுகுறித்து நியூஸ்செக்கர் சார்பில் ஆராய்ந்து அத்தகவல் பொய்யானது என்று உண்மை அறியும் கட்டுரை வெளியிட்டுள்ளோம். அக்கட்டுரையை இங்கே படிக்கலாம்.
தவெக மதுரை மாநாட்டுக்கு கூடிய கூட்டம் என்று பரவும் வீடியோ தவறானதாகும். அவ்வீடியோ கடந்த ஜூன் மாத்தில் மகாராஷ்டிராவில் நடந்த ரேக்ளா போட்டியில் எடுக்கப்பட்டதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram post by the user, @love_bailgada_sharyat, dated June 23, 2025
Short video post by the user, @warrior003, dated June 23, 2025
Visuals available on Google Street View
Telephonic Conversation with organiser Karlos Pahalwan
Ramkumar Kaliamurthy
November 28, 2025
Ramkumar Kaliamurthy
October 24, 2025
Ramkumar Kaliamurthy
November 26, 2025