Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
கருணாநிதியை தனது நாயுடன் ஒப்பிட்டு பதிவிட்ட உதயநிதி ஸ்டாலின்
வைரலாகும் பதிவி போலியாக எடிட் செய்யப்பட்டுள்ளது.
கருணாநிதியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது நாயுடன் ஒப்பிட்டு “RowdyTime” என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டிருந்ததாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
”DMK va adikiradhuku ivaney podhum ! ” என்று இந்த புகைப்படம் பரவுகிறது.

X Link/Archived Link


சமூக ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: RSS நபர் ஒருவர் அமெரிக்க தேவாலயத்திற்குள் நுழைந்து சேதம் விளைவித்ததாகப் பரவும் வீடியோ உண்மையா?
கருணாநிதியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது நாயுடன் ஒப்பிட்டு “Rowdy Times” என்று குறிப்பிட்டிருந்தார் என்பதாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படத்துடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எடுத்துக் கொண்ட படத்தில் “RowdyTime” என்று குறிப்பிட்டுள்ளாரா என ஆராய்ந்தபோது அப்புகைப்படத்தில் அப்படி எந்த வாசகமும் இடம்பெற்றிருக்கவில்லை.
ஜனவரி 02, 2026 அன்று இந்த புகைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுருந்தார். ஆனால், தனது நாயுடன் இருக்கும் புகைப்படத்தில் மட்டுமே அவர் “RowdyTime” என்று பதிவிட்டு வருகிறார்.

அதையே, கருணாநிதியுடன் இருக்கும் புகைப்படத்தில் போலியாக எடிட் செய்து பரப்பி வருகின்றனர்.
Also Read: “திமுக ஒரு தீய சக்தி” என்று திருமாவளவன் என்று கூறினாரா?
கருணாநிதியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது நாயுடன் ஒப்பிட்டு “Rowdy Times” என்று குறிப்பிட்டிருந்தார் உதயநிதி ஸ்டாலின் என்பதாகப் பரவும் புகைப்படம் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X Post from, Udhaystalin, Dated January 02, 2026
Facebook Post from, Udayanidhi Stalin, Dated September 13, 2025
Ramkumar Kaliamurthy
December 30, 2025
Ramkumar Kaliamurthy
December 24, 2025
Vijayalakshmi Balasubramaniyan
December 23, 2025