திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் கனடாவில் நடிகைகளுடன் இருப்பதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

“தந்தை கோவிட்டால் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் பலத்தை நிரூபிக்க குடியரசு தலைவர் தேர்தலில் ஒவ்வொரு எம்.எல்.ஏவின் ஓட்டும் முக்கியம். இந்த மாதிரியான சூழலில் உதயநிதி ஸ்டாலின் எதற்காக தாய்லாந்து வழியாக கனடா சென்றுள்ளார்” என்று சவுக்கு சங்கர் என்பவர் நேற்று டிவிட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் கனடாவில் நடிகைகளுடன் இருப்பதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.



Also Read: எடப்பாடி பழனிசாமி குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவும் விஷம பதிவு!
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் கனடாவில் நடிகைகளுடன் இருப்பதாக கூறி புகைப்படம் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, அப்புகைப்படத்தின் உண்மை பின்னணி குறித்து அறிய அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.
இதில் வைரலாகும் படம் உதயநிதி நடிப்பில் வெளிவந்த நெஞ்சுக்கு நீதி படத்தின் 50 ஆம் நாள் விழாவில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது.
இப்படத்தில் படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் நடிகைகளான தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர் உள்ளிட்டோருடன் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் எக்ஸிகியூட்டிவ் புரொடியூஸர் ராகுலும் இருப்பதை காண முடிகின்றது.

இதில் ராகுலின் படத்தை மட்டும் நீக்கிவிட்டு உதயநிதி கனடாவில் நடிகைகளுடன் இருக்கும் படம் என்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

Conclusion
திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் கனடாவில் நடிகைகளுடன் இருப்பதாக கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் படம், உண்மையில் நெஞ்சுக்கு நீதி 50 ஆவது நாள் விழாவில் எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகின்றது.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
Result: Missing Context
Sources
India Glitz thread, Tweeted on 11/07/2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)