ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkட்விட்டரில் ட்ரெண்டான வணக்கம் மோடி என்று நியூஸ்கார்டு வெளியிட்டதா தந்தி டிவி?

ட்விட்டரில் ட்ரெண்டான வணக்கம் மோடி என்று நியூஸ்கார்டு வெளியிட்டதா தந்தி டிவி?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

ட்விட்டரில் ட்ரெண்டான வணக்கம் மோடி என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

Source: Facebook

தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளைத் துவங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று ஒருநாள் பயணமாக தமிழகம் வந்திருந்தார். இதனைத் தொடர்ந்து #GoBackModi என்கிற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியது. அதற்கு இணையாக #Vanakkam_modi என்கிற ஹேஸ்டேக்கையும் ட்ரெண்ட் செய்ய பாஜகவினர் முயற்சி செய்தனர்.

இந்நிலையில், “ட்விட்டரில் ட்ரெண்டான வணக்கம் மோடி. சென்னை வரும் பிரதமரை வரவேற்கும் விதமாக #Vanakkam_Modi என்ற ஹேஸ்டேக்கில் தமிழக பாஜகவினர் 5.5 லட்சத்திற்கும் அதிகமான ட்விட் செய்து வருகின்றனர்” என்பதாக நியூஸ்கார்டு ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகியது.

ட்விட்டரில்
Source: Facebook

Facebook Link

ட்விட்டரில்
Source: Facebook

Facebook Link

ட்விட்டரில்
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ரயில் நிலைய போர்டில் ‘Go Back Modi’ என்று எழுதப்பட்டு இருப்பதாக வைரலாகும் புகைப்படம் உண்மையா?

Fact Check/Verification

ட்விட்டரில் ட்ரெண்டான வணக்கம் மோடி என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் நியூஸ்கார்டில் எழுத்துப்பிழைகள் அதிகளவில் இருந்ததால் உண்மையில் அப்படி ஒரு நியூஸ்கார்டினை தந்தி டிவி வெளியிட்டுள்ளதா என்று ஆராய்ந்தோம்.

அப்போது, “பிரதமர் வருகை – 5 அடுக்கு பாதுகாப்பு. பிரதமர் மோடி வருகையையொட்டி, சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு. சுமார் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். சென்னையில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை” என்று வெளியாகியுள்ள நியூஸ்கார்டில் வைரல் நியூஸ்கார்டில் இருக்கும் அதே பிரதமரின் புகைப்படம் இடம்பெற்று இருந்தது.

Fake Card
Original Card

எனவே, குறிப்பிட்ட நியூஸ்கார்டு குறித்து தந்தி டிவி இணை ஆசிரியர் அசோகவர்ஷினியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது “குறிப்பிட்ட நியூஸ்கார்டு போலியானது; தந்தி டிவி வெளியிட்டது அல்ல” என்று உறுதி செய்தார். எனவே, மேற்கூறிய தந்தி டிவி வெளியிட்ட நியூஸ்கார்டினை எடுத்தே வைரல் கார்டினை உருவாக்கியுள்ளனர் என்பது உறுதியானது.

Conclusion

ட்விட்டரில் ட்ரெண்டான வணக்கம் மோடி என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Manipulated Media/Altered Photo/Video

Our Sources
Thanthi Tv

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular