Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
உக்ரைன் பிணங்களுக்கு உயிர் கொடுத்த ஊடகம் என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் சூழல் உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், அதுகுறித்த போலியான செய்திகளும், வீடியோக்களும் கூட சமூக வலைத்தளங்களில் பெருமளவில் பரவி வருகிறது.
அவ்வகையில், “உக்ரைனில் செய்தியாளர் பேசிக்கொண்டு இருக்கும் போதே ஒரு பிணம் தனது மேல் போர்த்தியிருந்த பாலிதீன் ஷீட்டை சரிசெய்கிறுது. ஆக அங்கும் ஊடகங்கள் விலைபோய், மக்களை திசை திருப்பும் சதி வேலையை செய்கிறது. வாழ்க! ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகம்.
இதிலென்ன சதியோ! காலம்தான் பதில் சொல்லனும்!” என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திருமலையை நடந்து சென்று அடைய 2388 படிகளை புதிதாக அமைத்துள்ளதா ரிலையன்ஸ்?
உக்ரைன் பிணங்களுக்கு உயிர் கொடுத்த ஊடகம் என்பதாக வைரலாகும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோ காட்சியில் செய்தியாளர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கையில் பின்னணியில் பிணங்கள் அடுக்கப்பட்டிருப்பதாகவும், அதில் ஒரு உறையில் இருந்து ஒருவர் உயிருடன் வெளியே வரும்போது அதை ஒருவர் மூடுவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதே போன்று வைரலாகும் வீடியோவில் “Wien: Demo gegen klimapolitik” என்கிற வாசகங்களும் இடம் பெற்றுள்ளது.
அந்த வீடியோ வார்த்தைகளை வைத்து கீவேர்ட் சர்ச் செய்தபொழுது, வைரலாகும் வீடியோ உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான போர் தொடங்குவதற்கு முன்பாகவே oe24TV என்கிற ஆஸ்திரிய சேனல் ஒன்றில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதியன்று, ஆஸ்திரிய நாட்டின் தலைநகரான வியன்னாவில் பருவநிலை மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பாக Fridays for future wien என்கிற ஆஸ்திரியா (ViennaForFuture) என்கிற சமூக ஆர்வல அமைப்பு நடத்திய போராட்டத்தின் வீடியோ என்பது நமக்குத் தெரிய வந்தது.
இதற்கும் உக்ரைனிய போருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதும் உறுதியானது.
உக்ரைன் பிணங்களுக்கு உயிர் கொடுத்த ஊடகம் என்பதாக வைரலாகும் வீடியோ தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
February 25, 2022
Vijayalakshmi Balasubramaniyan
March 3, 2022
Vijayalakshmi Balasubramaniyan
March 3, 2022