கோவை மாநகராட்சி 2வது வார்டில் பாஜக வேட்பாளர் வத்சலா அபார வெற்றி என்பதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி வார்டுகளுக்கு நடைபெற்று முடிந்த தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவும் மாநகராட்சி 22, நகராட்சி 56 மற்றும் பேரூராட்சி 230 இடங்களில் வென்றுள்ளது.
இதற்கிடையில், வாக்கு எண்ணிக்கை மற்றும் வெற்றி விபரம் தொடர்பான வதந்திகளும் சமூக வலைத்தளங்களில் பெருமளவில் உலா வந்தன.
அவ்வகையில், “கோவை மாநகராட்சி 2 வது வார்டில் பாஜக வேட்பாளர் திருமதி.வத்சலா அபார வெற்றி” என்கிற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
கோவை மாநகராட்சி 2வது வார்டில் பாஜக வேட்பாளர் வத்சலா வெற்றி பெற்றதாகப் பரவிய செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் பக்கத்தில் ஆராய்ந்தபோது, கோவை 2வது வார்டில் அ.புஷ்பமணி என்கிற திமுக வேட்பாளரே வெற்றி பெற்றுள்ளார் என்பது நமக்கு உறுதியானது.

எனவே, கோவை 2வது வார்டில் பாஜக வேட்பாளர் வத்சலா வெற்றி என்பதாக பரவிவரும் தகவல் தவறானது என்பது தெளிவானது. இதனை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
Conclusion
கோவை மாநகராட்சி 2வது வார்டில் பாஜக வேட்பாளர் வத்சலா வெற்றி பெற்றதாகப் பரவிய செய்தி தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)