ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 1, 2024
ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 1, 2024

HomeFact Checkஅமெரிக்க டைம்ஸ் ஸ்கொயர் சதுக்கத்தில் இடம்பெற்ற முதல்வர் ஸ்டாலின் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

அமெரிக்க டைம்ஸ் ஸ்கொயர் சதுக்கத்தில் இடம்பெற்ற முதல்வர் ஸ்டாலின் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: அமெரிக்கவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்று Times Square-ல் கொடுக்கப்பட்ட வரவேற்பு

Fact: வைரலாகும் புகைப்படம் உண்மையில் எடிட் செய்யப்பட்டது.

அமெரிக்க டைம்ஸ் ஸ்கொயர் சதுக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவப்படம் இடம்பெற்றதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“அமெரிக்கவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்று Times Square-ல் கொடுக்கப்பட்ட வரவேற்பு” என்று News 18 Tamil Nadu உள்ளிட்ட பலரும் இதனை பகிர்ந்து வருகின்றனர்.

அமெரிக்க
Screenshot from X @Hereprak

X Link/Archived Link

Screenshot from X @Sivajikm_offl1

X Link/Archived Link

Screenshot from X @News18TamilNadu

X Link/Archived Link

Screenshot from X @PTTVOnlineNews

X Link/Archived Link

Screenshot From Indian Express Tamil

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: 7837018555 என்கிற எண்ணை தொடர்புக் கொண்டால் இரவில் பயணம் செய்யும் பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கிடைக்குமா?

Fact Check/Verification

அமெரிக்க டைம்ஸ் ஸ்கொயர் சதுக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவப்படம் இடம்பெற்றதாக பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது The Clio என்கிற இணையப்பக்கத்தில் இடம்பெற்றிருந்த டைம்ஸ் ஸ்கொயர் புகைப்படம் ஒன்று நமக்குக் கிடைத்தது.

குறிப்பிட்ட புகைப்படத்தில் மற்ற சில நிறுவனங்களின் விளம்பரங்கள் இடம்பெற்றுள்ள இடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை எடிட் செய்துள்ளனர் என்பது இரு புகைப்படங்களையும் ஒத்திட்டு பார்த்தபோது நமக்குத் தெளிவாகியது.

கடந்த 2015ஆம் ஆண்டு Nantucketpreservation என்கிற இணையதளப்பக்கத்திலும் டைம்ஸ் சதுக்கத்தின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. ஆனால், அதிலும் வேறு விளம்பரங்களே இடம்பெற்றிருந்தன. அப்புகைப்படமே எடிட் செய்யப்பட்டு பரவுகிறது.

ஆனால், இப்புகைப்படம் சரியாக எந்த வருடம் எடுக்கப்பட்டது என்பதைத் தெளிவாக கண்டறிய முடியவில்லை. ஏனெனில், கடந்த 2011ஆம் ஆண்டே இப்புகைப்படம் சமூக வலைத்தளப்பக்கம் ஒன்றில் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டினை மையமாக வைத்து இப்புகைப்படத்தை ஆராய்ந்தபோது மற்றொரு சமூக வலைத்தளப்பக்கத்திலும் இதுதொடர்பாக ஒரு புகைப்படம் கடந்த 2023ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்தது. அதுவும் கிட்டத்தட்ட இப்புகைப்படத்துடன் ஒத்துப்போகிறது.

எனினும், கடந்த பல வருடங்களாகவே இணையதளங்களில் இப்புகைப்படம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 Also Read: கேரளாவில் யானையின் உடலில் தீ வைக்கப்பட்டதாகப் பரவும் புகைப்படத்தகவல் உண்மையா?

Conclusion

அமெரிக்க டைம்ஸ் ஸ்கொயர் சதுக்கத்தில் இடம்பெற்ற முதல்வர் ஸ்டாலின் என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Our Sources
Report from, Nantucketpreservation, Dated January 02, 2015
Instagram Post From, onetimessquarenyc, January 21, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular