ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkவிமான பைலட்கள் போல் அசத்தும் வந்தே பாரத் ரயில் ஓட்டுநர்கள் என்று பரவும் வீடியோ தகவல்...

விமான பைலட்கள் போல் அசத்தும் வந்தே பாரத் ரயில் ஓட்டுநர்கள் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: விமான பைலட்கள் போல அசத்தும் வந்தே பாரத் லோகோ பைலட்கள் 

Fact: வைரலாகும் வீடியோவில் இருப்பவர்கள் டிக்கெட் பரிசோதகர்கள் ஆவர்.

விமான பைலட்கள் போன்று அசத்தும் வந்தே பாரத் லோகோ பைலட்கள் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”வந்தே பாரத் ரயில் லோகோ பைலட் குழு! இந்த அற்புதமான காட்சியை நீங்கள் கற்பனை செய்திருக்க முடியுமா? நிலக்கரி என்ஜின் டிரைவர்கள் முதல் இந்த ஏர்லைன் ஸ்டைல் இன்ஜின் பைலட் வரை” என்று இந்த வீடியோ வைரலாகிறது.

Screenshot from X @PrabhuManohara3

Archived Link

Screenshot from Facebook/bjp.lokeshkumar.7

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தமிழக பாஜக என்னும் தேரை இழுத்து தெருவில் விட்டுவிட்டார் அண்ணாமலை என்று கூறினாரா ஹெச்.ராஜா?

Fact Check/Verification

விமான பைலட்கள் போல அசத்தும் வந்தே பாரத் லோகோ பைலட்கள் என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அதன் முடிவில் வைரலாகும் வீடியோவில் இருக்கும் பெண்கள் வந்தே பாரத் ரயிலின் டிக்கெட் பரிசோதகர்கள் என்பதை நம்மால் அறிய முடிந்தது.

“Shijina Rajan” என்கிற சமூக வலைத்தளப்பக்கத்தில் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதியன்று இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. வைரலாகும் வீடியோவில் இடம்பெற்றிருக்கும் டிக்கெட் பரிசோதகர்களில் இவரும் ஒருவர் என்பதை அவரது சமூக வலைத்தளப்பக்கம் மூலமாக அறிய முடிந்தது.

Instagram will load in the frontend.

நம்முடைய தேடலில் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதியன்று யூடியூபில் வெளியாகியிருக்கும் வந்தே பாரத் டிக்கெட் பரிசோதகர்களின் அறிமுக வீடியோ ஒன்றில் வைரல் வீடியோவில் இடம்பெற்றிருக்கும் மற்றொரு பெண்ணை நம்மால் காண முடிந்தது. அவரது பெயர் டயானா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அவருடைய பெயர் மற்றும் கீ-வேர்டுகளை வைத்து தேடியபோது டயானா ஜான் செல்வன் என்னும் இந்த டிக்கெட் பரிசோதகர் பிரபல தடகள வீரர் தம்பதிகளான மறைந்த ஜான் செல்வன் மற்றும் பத்மினி தாமஸின் மகள் என்பது கேரள செய்திகளில் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம், ஏர்லைன்ஸ் ஸ்டைலில் வலம் வரும் வந்தே பாரத் ஒட்டுநர்கள் என்று பரவும் வீடியோவில் இருக்கும் பெண்கள் உண்மையில் டிக்கெட் பரிசோதகர்கள் என்பது உறுதியாகிறது.

Also Read: திமுக ஆட்சியில் கொடிவேரி அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் தாக்கப்பட்டதாக பரவும் பழைய வீடியோ!

Conclusion

விமான பைலட்கள் போல அசத்தும் வந்தே பாரத் லோகோ பைலட்கள் என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் மூலமாக உறுதியாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Instagram Post from, travelling_tte, Dated September 23, 2023
YouTube Video From, Tech Travel Eat Shorts, Dated April 25, 2023

YouTube Video From, Kaumudy Global, Dated April 26, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular