சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkதிமுக ஆட்சியில் கொடிவேரி அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் தாக்கப்பட்டதாக பரவும் பழைய வீடியோ!

திமுக ஆட்சியில் கொடிவேரி அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் தாக்கப்பட்டதாக பரவும் பழைய வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: திமுக ஆட்சியில் கொடிவேரி அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் தாக்கப்பட்டனர்.

Fact: வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடந்ததாகும்.

கோபிசெட்டிப்பாளையத்தின் அருகே பவானி ஆற்றில் கட்டப்பட்டுள்ள அணை கொடிவேரி அணையாகும். இந்த அணையின் அடிவாரத்தில் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் சுற்றுலா பயணிகளை குண்டர்கள் தாக்கியதாகவும், இதற்கு காரணம் திமுக ஆட்சிதான் என்றும் கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

திமுக ஆட்சியில் கொடிவேரி அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் தாக்கப்பட்டதாக வைரலான வீடியோ

X Link | Archived Link

திமுக ஆட்சியில் கொடிவேரி அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் தாக்கப்பட்டதாக வைரலான வீடியோ

Archived Link

திமுக ஆட்சியில் கொடிவேரி அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் தாக்கப்பட்டதாக வைரலான வீடியோ

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தமிழக பாஜக என்னும் தேரை இழுத்து தெருவில் விட்டுவிட்டார் அண்ணாமலை என்று கூறினாரா ஹெச்.ராஜா?

Fact Check/Verification

திமுக ஆட்சியில் கொடிவேரி அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் தாக்கப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து கூகுள் ரிவர்ஸ் சர்ச் முறையை பயன்படுத்தி அவ்வீடியோ குறித்து ஆய்வு செய்தோம்.

இந்த ஆய்வில் செய்திப்புனல் எனும் இணைய ஊடகத்தில் இச்சம்பவம் குறித்து பிப்ரவரி 17, 2020 அன்று செய்தி வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. அச்சமயத்தில் தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தது திமுக அல்ல; அதிமுகவாகும்.

திமுக ஆட்சியில் கொடிவேரி அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் தாக்கப்பட்டதாக வைரலான வீடியோ
Screengrab from Seithipunal

தொடர்ந்து தேடியதில், இச்சம்பவம் குறித்து போலீசில் புகாரளிக்கப்பட்டதாகவும், தம்பதியினரை தாக்கிய நபர்கள் மன்னிப்பு கேட்டதாகவும் கூறி வீடியோ ஒன்று நியூஸ் 13 டுடே எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் பிப்ரவரி 16, 2020  அன்று பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

இதனடைப்படையில் காண்கையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவத்தை தற்போது திமுக ஆட்சியில் நடந்ததாக சமூக வலைத்தளங்களில் திரித்து பரப்பப்பட்டு வருகின்றது என்பது தெளிவாகின்றது.

Also Read: சீமானிடம் கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர் விசிகவை சேர்ந்தவர் என்று பரவும் தவறான நபரின் படம்!

Conclusion

திமுக ஆட்சியில் கொடிவேரி அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் தாக்கப்பட்டதாக வைரலான வீடியோ ஒரு பழைய வீடியோ என்பதும், வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடந்தது என்பதும் நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Report fom Seithipunal, Dated February 17, 2020
Facebook Post from News 13 Today, Dated February 16, 2020

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular