செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30, 2024
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30, 2024

HomeFact Checkதமிழக பாஜக என்னும் தேரை இழுத்து தெருவில் விட்டுவிட்டார் அண்ணாமலை என்று கூறினாரா ஹெச்.ராஜா?

தமிழக பாஜக என்னும் தேரை இழுத்து தெருவில் விட்டுவிட்டார் அண்ணாமலை என்று கூறினாரா ஹெச்.ராஜா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: தேரை இழுத்து தெருவில் விட்டுவிட்டார் அண்ணாமலை – ஹெச்.ராஜா

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக பரவுகிறது.

தமிழக பாஜக என்னும் தேரை இழுத்து தெருவில் விட்டுவிட்டார் அண்ணாமலை என்று ஹெச்.ராஜா கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“தமிழக பா.ஜ.க எனும் தேரை அண்ணாமலை முன்னோக்கி இழுத்துவருவார் என டெல்லி தலைமை எதிர்பார்த்தது; ஆனால்,
அவரோ தேரை இழுத்து தெருவில் விட்டுவிட்டார். – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா”
என்று இந்த நியூஸ்கார்ட் பரவி வருகிறது.

Screenshot from X @aruran_tiru

Archived Link

Screenshot from Facebook/sgurunathan2

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: காவிரி பிரச்சனை காரணமாக கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதாக பரவும் பழைய வீடியோ!

Fact Check/Verification

தமிழக பாஜக என்னும் தேரை இழுத்து தெருவில் விட்டுவிட்டார் அண்ணாமலை என்று ஹெச்.ராஜா கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் நியூஸ்கார்ட் நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதாகப் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம். ஆனால், கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியன்று அவ்வாறு எந்த நியூஸ்கார்டும் வெளியாகியிருக்கவில்லை.

எனவே, இதுகுறித்து நியூஸ் 7 தமிழ் ஆசிரியரான சுகிதா சாரங்கராஜை தொடர்பு கொண்டு கேட்டபோது, “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது” என்று உறுதி செய்தார்.

Also Read: ராகுல் காந்தி கையில் 420 எண்ணிட்ட பேட்ஜ் கட்டியிருப்பதாகப் பரவும் எடிட் புகைப்படம்!

Conclusion

தமிழக பாஜக என்னும் தேரை இழுத்து தெருவில் விட்டுவிட்டார் அண்ணாமலை என்று ஹெச்.ராஜா கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் மூலமாக உறுதியாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone Conversation with Sugitha Sarangaraj, News 7 Tamil, Dated October 03. 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular