ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact CheckFact Check: விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரையில் அமர வைத்தாரா?

Fact Check: விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரையில் அமர வைத்தாரா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim
அடங்கமறு அத்துமீறு என வீறு கொண்டு எழுந்த தமிழனை தெலுங்கு திராவிடத்திடம் அடகு வைத்தது மட்டுமல்லாமல் தானும் மற்றைய மனிதர்களுக்கு சமமாக உட்காரமுடியாமல் போனதுதான் திருமாவின் சாதனை.

Fact
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் தரையில் அமர வைக்கப்பட்டதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரையில் அமர வைத்ததாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

“அடங்கமறு அத்துமீறு என வீறு கொண்டு எழுந்த தமிழனை தெலுங்கு திராவிடத்திடம் அடகு வைத்தது மட்டுமல்லாமல் தானும் மற்றைய மனிதர்களுக்கு சமமாக உட்காரமுடியாமல் போனதுதான் திருமாவின் சாதனை… ஆழ்ந்து சிந்தித்து பார் தமிழா புரியும்” என்பதாகவும், வேறு சில பதிவுகளுடனும் இப்புகைப்படம் வைரலாகிறது.

Screenshot From Twitter @kirubaganesan3
Screenshot from Twitter @Baskara91116099

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: இளைஞர்கள் அரசியலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று பேசினாரா முன்னாள் துணைக்குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு?

Fact Check / Verification

விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரையில் அமர வைத்ததாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது, கடந்த 2018ஆம் ஆண்டு செய்தி ஒன்று நமக்குக் கிடைத்தது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மு.க.ஸ்டாலினை சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இது என்பது செய்தி இணையதளங்களில் வெளியாகியுள்ளது. The News Minute உள்ளிட்ட செய்தித்தளங்களில் இப்புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் அதில் திருமாவளவன் தரையில் அமர்ந்திருப்பது போல எந்தக்காட்சியும் இடம்பெற்றிருக்கவில்லை. எனவே, வைரல் புகைப்படத்தில் திருமாவளவன் தரையில் அமர்ந்திருப்பது போன்று எடிட் செய்திருக்கிறார்கள் என்பது தெளிவாகியது.

மேலும், The News Minute, The Indian Express உள்ளிட்ட செய்தித்தளங்களில் திருமாவளவன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்த புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. அதில், இருக்கையில் அமர்ந்து மு.க.ஸ்டாலினுடன் பேசிக்கொண்டிருக்கிறார் திருமாவளவன்.

எனவே, வைரலாகும் புகைப்படத்தில் திருமாவளவன் தரையில் அமர்ந்திருப்பதாக வதந்தி பரப்பும் நோக்கில் இப்புகைப்படத்தை எடிட் செய்துள்ளனர் என்பது தெளிவாகியது. கடந்த 2020 முதலே இப்புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited Image
Original Image

Also Read: Fact check: நாய் பண்ணை தொழிலுக்கே மீண்டும் செல்லவிருக்கிறேன் என்றாரா பாஜக எஸ்.ஜி.சூர்யா?

Conclusion

விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரையில் அமர வைத்ததாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Our Sources
News Report From, The News Minute, Dated July 27, 2018
News Report From, DT Next
Twitter Post From, The Indian Express, Dated July 27, 2018


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular