Fact Check
ரசிகனிடம் பிளாக் டிக்கெட் விற்று சம்பாதித்தேன் என்று விஜய் கூறினாரா?
Claim
ரசிகனிடம் பிளாக் டிக்கெட் விற்று சம்பாதித்தேன் என்று விஜய் கூறினார்.
Fact
“குடும்பத்தை வைத்து கொள்ளை அடிக்கின்ற உங்களுக்கே இவ்வளவு இருந்தால், சொந்த ரசிகனிடம் பிளாக் டிக்கெட் விற்று பணம் சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்” என்று தவெக தலைவர் விஜய் பேசியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
“குடும்பத்தை வைத்து கொள்ளை அடிக்கின்ற உங்களுக்கே இவ்வளவு இருந்தால், சொந்த ரசிகனிடம் பிளாக் டிக்கெட் விற்று பணம் சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்” என்று தவெக தலைவர் விஜய் பேசியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
இவ்வீடியோவை பலரும் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திருச்சி பரப்புரையில் ‘தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா’ பாடலை பாடினாரா விஜய்?
Fact Check/Verification
ரசிகனிடம் பிளாக் டிக்கெட் விற்று சம்பாதித்தேன் என்று விஜய் கூறியதாக பரப்பப்படும் வீடியோவில் தந்தி டிவியின் லோகோ இடம்பெற்றிருந்ததால் வைரலாகும் வீடியோ குறித்து தந்தி டிவியின் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
அத்தேடலில்“Vijay | Tvk Vijay | “என்ன மிரட்டுறீங்களா?” டோனை மாற்றிய விஜய்.. சரமாரியாக அட்டாக்” என்று தலைப்பிட்டு தந்தி டிவியின் யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
அவ்வீடியோவின் 3:18 நேரத்தில்,”குடும்பத்தை வைத்து கொள்ளை அடிக்கின்ற உங்களுக்கே இவ்வளவு இருந்தால், சொந்தமாக உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்” என்று பேசி இருப்பதை காண முடிந்தது.
தொடர்ந்து தேடுகையில் தினமலர், விகடன், நியூஸ் தமிழ் உள்ளிட்ட ஊடகங்களின் யூடியூப் பக்கங்கள் வெளியிட்ட வீடியோக்களில் முறையே 14:17, 14:11, 15:41 நேரத்தில் மேற்கண்ட கருத்தை விஜய் பேசியிருப்பதை காண முடிந்தது.
இதன்படி பார்க்கையில் ‘சொந்தமாக உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்’ என்று விஜய் பேசியதை “சொந்த ரசிகனிடம் பிளாக் டிக்கெட் விற்று பணம் சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்’ என்று மாற்றி எடிட் செய்து வைரலாகும் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது என தெளிவாகின்றது.
Also Read: விஜய் பிரச்சார வாகனத்தில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளதா?
Conclusion
ரசிகனிடம் பிளாக் டிக்கெட் விற்று சம்பாதித்தேன் என்று விஜய் கூறியதாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்ட போலியான வீடியோவாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video by Thanthi TV, dated September 20, 2025
YouTube Video by Dinamalar, dated September 20, 2025
YouTube Video by Vikatan TV, dated September 20, 2025
YouTube Video by News Tamil, dated September 20, 2025