Fact Check
தவெக தலைவர் விஜய் ஹல்க் ஹோகனுக்கு அஞ்சலி செலுத்தியதாகப் பரவும் புகைப்படம் உண்மையா?
Claim
தவெக தலைவர் விஜய் ஹல்க் ஹோகனுக்கு அஞ்சலி
Fact
வைரலாகும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும். உண்மையான புகைப்படத்தில் இருப்பது பெரியார் ஆகும்.
தவெக தலைவர் விஜய் ஹல்க் ஹோகனுக்கு அஞ்சலி செலுத்தியதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”இரண்டு நாள் கழித்து மறைந்த #HulkHogan க்கு பனையூரில் அஞ்சலி செலுத்தினார் தவெக தலைவர் JV..தவெகவினர் நெகிழ்ச்சி” என்று இந்த புகைப்படம் பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அன்வர் ராஜா போனால் போகட்டும்; அதிமுகவிற்கு இஸ்லாமிய வாக்குகள் தேவையில்லை என்றாரா ராஜேந்திர பாலாஜி?
Fact Check/Verification
தவெக தலைவர் விஜய் ஹல்க் ஹோகனுக்கு அஞ்சலி செலுத்தியதாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது தந்தை பெரியாருக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை என்கிற தலைப்பில் கடந்த டிசம்பர் 24, 2024 அன்று வெளியாகிய செய்தி நமக்குக் கிடைத்தது.
அதில், பெரியார் புகைப்படத்திற்கு மலர் தூவி விஜய் மரியாதை செலுத்தும் காட்சி இடம்பெற்றிருந்தது.
அக்காட்சியினை எடிட் செய்தே தற்போது அவர் ஹல்க் ஹோகனுக்கு அஞ்சலி செலுத்துவதாக எடிட் செய்துள்ளனர் என்பது நமக்கு உறுதியாகியது.


Also Read: இன்பநிதி பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக திமுகவில் நியமிக்கப்பட்டுள்ளாரா அன்வர் ராஜா?
Conclusion
தவெக தலைவர் விஜய் ஹல்க் ஹோகனுக்கு அஞ்சலி செலுத்தியதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video by Puthiya Thalaimurai, dated December 24, 2024
X Post by, TVK Vijay, Dated December 24, 2024